ஆஸ்திரேலியா

அமெரிக்காவில் கைதான ஆஸ்திரேலிய ஹேக்கரை நாடு கடத்த உத்தரவு

  • June 11, 2025
  • 0 Comments

அமெரிக்க ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க) அதிகாரிகள் ஆஸ்திரேலிய ஹேக்கர் டேவிட் க்ரீஸை கைது செய்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளனர். 26 வயதான இவர் 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய தனிப்பட்ட தரவு திருட்டுக்கு காரணமான நபரும் ஆவார். அவர் Abdilo, Notavirus, Surivaton, Grey Hat மற்றும் Mafia’s Bitch ஆகிய பெயர்களில் ஆன்லைனில் தோன்றி தரவுகளைத் திருடியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, 2020 மற்றும் […]

வட அமெரிக்கா

அமெரிக்க யூடியூபர் மற்றும் அவரது மனைவி கொலை – மற்றுமொரு யூடியூபர் கைது

  • June 11, 2025
  • 0 Comments

அமெரிக்க யூடியூபரான ஃபின்னி டா லெஜண்ட் மற்றும் அவரது மனைவியை சக யூடியூபரான மானுவல் ரூயிஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அமெரிக்காவில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் கேசினோக்கள் அதிக அளவில் உள்ள லாஸ் வேகாஸ் ஸ்டிரிப்பில், தொழில் போட்டியில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதிப்புரிமை மீறல் பிரச்சனையில் இருவர் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்த வந்தது. இந்த நிலையில், பெல்லாஜியோ ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு […]

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்.!

  • June 11, 2025
  • 0 Comments

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆஸ்ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் கூட, மறுபக்கம் தென்னாப்பிரிக்கா கேப்டன் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

லொஸ் ஏஞ்சல்ஸில் அதிகரிக்கும் பதற்றம் – ஊரடங்கு உத்தரவு அமுல்

  • June 11, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாசவேலை மற்றும் கொள்ளையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் அறிவித்தார். அமெரிக்க நேரப்படி இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவை மீறும் எவரும் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் எச்சரித்தார். கடந்த திங்கட்கிழமை இரவு 23 வணிகங்கள் சூறையாடப்பட்டதை அடுத்து, […]

இலங்கை

இலங்கையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் மோசடியாக விடுதலை

  • June 11, 2025
  • 0 Comments

இலங்கையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் எனும் விடயம், விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார். நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2024 கிறிஸ்மஸ் பண்டிகையின் போது 57 கைதிகளும், 2025 சுதந்திர தினத்தின் போது 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் முறை கேடாக விடுவிக்கப்பட்டனர் என்று, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்ய வாய்ப்பு

  • June 11, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (11) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் […]

செய்தி

ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் ஏற்பட்ட பதற்றம் – கட்டி வைக்கப்பட்ட பெண் பயணி

  • June 11, 2025
  • 0 Comments

சிட்னிக்கு சென்ற சர்வதேச விமானத்தில், பெண் ஒருவர் மதுபானம் அருந்திய பின்னர் குழப்பம் ஏற்படுத்தியதால் வலுக்கட்டாயமாக இருக்கையில் கட்டி வைக்கப்பட்டுள்ளார். பெண் 64 வயதான இரட்டை இத்தாலிய மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. விமானப் பணிப்பெண் ஒருவர் மதுபானத்தை குடிக்க விடாமல் தடுத்ததால், அவரைத் தாக்கிய பின்னர், விமானத்தில் அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பெண் விமானத்தில் அமர மறுத்ததால், குழுவினர் அவரைக் கட்டி வைக்க முடிவு செய்தனர். சிட்னி […]

உலகம் செய்தி

வெள்ளி கிரகத்திற்கு அருகில் ராட்சத விண்கல் கூட்டம் – எந்நேரத்திலும் பூமியைத் தாக்கும் அபாயம்

  • June 11, 2025
  • 0 Comments

வெள்ளி கிரகத்திற்கு அருகில் மறைந்திருக்கும் ராட்சத விண்கல் கூட்டம், பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக் கூடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் சாவோ பாலோ பல்கலைக் கழக வானியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ‘இணை-சுற்றுப்பாதை விண்கல்’ என்றழைக்கப்படும் இந்த விண்வெளிப் பாறைகள், பொதுவாக கிரகங்களை நேரடியாகச் சுற்றாமல் அவற்றின் அருகே பயணிக்கின்றன. இவற்றுக்கென ஒரு நிலையான சுற்றுவட்டப் பாதை இல்லாததால், இவற்றைக் கண்காணிப்பது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது. […]

அரசியல் இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை கைவிட முடியாதென கூறிய டொனால்ட் டிரம்ப்

  • June 11, 2025
  • 0 Comments

கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லிங்க் சேவையை வெள்ளை மாளிகை கைவிடாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் நல்ல சேவை வழங்குவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது எலான் மஸ்க் இடம் வாங்கிய டெஸ்லா காரை, வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவுள்ளதாக கூறினார். பத்திரிகை கட்டுரையை மேற்கோள் காட்டி, எலான் மஸ்க் வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. […]

இந்தியா செய்தி

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

  • June 10, 2025
  • 0 Comments

மணிப்பூரில் நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகங்கள் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை தளர்த்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐந்து மாவட்டங்களின் நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார், மேலும் பொது பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் பராமரிக்கும் அதே வேளையில் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்துவது பொருத்தமானது என்று கருதப்படுகிறது. ஐந்து மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள் பிறப்பித்த தனி உத்தரவுகளில், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு […]