செய்தி விளையாட்டு

Asia Cup – வங்கதேச அணிக்கு எதிராக 168 ஓட்டங்கள் குவித்த இந்தியா

  • September 24, 2025
  • 0 Comments

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதி வருகின்றன். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் அபிஷேக் 37 பந்துகளில் 75 ஓட்டங்கள் […]

பொழுதுபோக்கு

விஜய் டிவி சீரியல் இயக்குனர் திடீர் மரணம்

  • September 24, 2025
  • 0 Comments

பிரபல சின்ன திரை இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இயக்குநர் நாராயணமூர்த்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இயக்குநர் நாராயணமூர்த்தியின் இறுதி சடங்குகள் பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொடர் மூலம் […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் – 2 வெளியீட்டுத் திகதியை கூறினார் ரஜினி

  • September 24, 2025
  • 0 Comments

ஜெயிலர் – 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து ரஜினி பேசியுள்ளார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் – 2 திரைப்படம் 2026, ஜூன் 12 ஆம் திகதி வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர் – 2 திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் […]

பொழுதுபோக்கு

நான்கு வயதில் தேசிய விருது வென்ற த்ரிஷா தோசர்

  • September 24, 2025
  • 0 Comments

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று(செப்.23) நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில், சிறந்த படத்துக்காக பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும், வாத்தி பட பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷுக்கு […]

அறிந்திருக்க வேண்டியவை உலகம்

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆபத்தில் உள்ள பெண்களின் தொழில்கள்!

  • September 24, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவால் பெண்களின் வேலைகள் விகிதாச்சாரத்தில் இல்லாத அளவுக்கு ஆபத்தில் உள்ளதாக புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. ஆண்களின் வேலைகளில் 21% உடன் ஒப்பிடும்போது, ​​உலகளவில் கிட்டத்தட்ட 28% பெண்களின் வேலைகள் அச்சுறுத்தலில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்பப் பணியாளர்களில் பெண்கள் சுமார் 29% மட்டுமே உள்ளனர் மற்றும் தொழில்நுட்பத் தலைமைப் பதவிகளில் வெறும் 14% மட்டுமே உள்ளனர். தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பில் பல தசாப்த கால முன்னேற்றத்தைப் பாதுகாக்க, பெண்களின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க சுங்க அமலாக்க தடுப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு!

  • September 24, 2025
  • 0 Comments

டல்லாஸில் உள்ள குடிவரவு மற்றும் அமெரிக்க சுங்க அமலாக்க தடுப்பு மையத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரி  தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. ICE இன் தற்காலிக இயக்குநர் டோட் லியோன்ஸ் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர்கள் ஊழியர்களாகவோ, கைதிகளாகவோ, அல்லது அவ் மையத்தை பார்வையிட வந்த பொதுமக்களாகவோ இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி […]

பொழுதுபோக்கு

த்ரிஷாவை மிஞ்சிடும் காந்தாரா நடிகை ருக்மணியின் அழகு

  • September 24, 2025
  • 0 Comments

திரைத்துறையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல். விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை ருக்மணி. தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வருகிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்தின் தோற்றம் தான் […]

வட அமெரிக்கா

இரு நாடுகள் தீர்வுதான் இலக்கு என்பதை இஸ்ரேல் புரிந்துகொண்டது: கனேடிய பிரதமர்

  • September 24, 2025
  • 0 Comments

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அருகருகே அமைதியாக வாழ்வதன் மூலம் இறுதியில் இரு நாடுகள் என்ற தீர்வு ஏற்படும் என்ற பொதுவான புரிதலை இஸ்ரேல் ஆரம்பத்தில் இருந்தே கொண்டுள்ளது என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வில் கலந்து கொண்ட போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், கார்னி, அதுதான் நம்பிக்கை என்று கூறினார், ஆனால் இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்ததால் அந்த நம்பிக்கை குறைந்து வருவதாகக் கூறினார். மந்தநிலைதான் […]

இலங்கை முக்கிய செய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்த இலங்கை அரசாங்கம்!

  • September 24, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு தொழிலாளி பணியில் இருக்கும்போது இறந்தால் அவருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு  2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (24) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இதுவரை, வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏற்படும் மரணத்திற்கு  6 மில்லியன் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. மேலும் அந்தத் தொகையுடன்  1.4 மில்லியன் சேர்க்கப்பட்டு  2 மில்லியன் இழப்பீடு வழங்கப்படும் என்று  விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். […]

ஆசியா

காசாவில் 20,000 அமைதி காக்கும் படையினரை நிலைநிறுத்த இந்தோனேசியா தயார்: ஐ.நா-வில் ஜனாதிபதி பிரபோவோ

  • September 24, 2025
  • 0 Comments

அமைதிப் பணிக்காக குறைந்தது 20,000 வீரர்களை காஸாவிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) உரையாற்றிய பிரபோவோ, உலகில் ஆக அதிக முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தோனீசியா, ‘வலிமையால் சரியானதைச் செய்ய முடியாது’ என்பதைக் காட்டும் வகையிலான அமைதியை விரும்புவதாகக் கூறினார். “ஐநாமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அமைதிக்குக் காப்பாளர்கள் தேவைப்படும் இடத்தில் சேவையாற்றுவதைத் தொடர்வோம்,” என்று அவர் சொன்னார். “ஐநா […]

error: Content is protected !!