புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 100 பயிற்சி மையங்களை அமைக்க இந்தோனேசியா திட்டம்
புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களை நிறுவ இந்தோனீசியாவின் புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.அத்தகைய ஊழியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிய மேலும் ஆயத்தமாக இருப்பதை உறுதிசெய்வதே நோக்கம். “அதிபர் 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அவற்றுக்கான மேம்பாட்டுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பார்,” என்று புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் காடிர் கார்டிங் கூறினார். அந்த நிலையங்கள் கட்டங்கட்டமாக நிறுவப்படும் என்றும் முதற்கட்டத்தில் 30 நிலையங்களை நிறுவ திட்டம் […]













