ஐரோப்பா

பிரித்தானியாவில் -14C ஆக குறையும் வெப்பநிலை : பனிபொழிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • January 8, 2025
  • 0 Comments

தெற்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான புதிய வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு மாவட்டங்களை புதன்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு முதல் ஐந்து சென்டிமீட்டர் வரையிலான பனி மிகவும் பரவலாகவும், உயரமான நிலப்பரப்பில் 10 செ.மீ. வரை பொழியும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் வெப்பநிலையானது -14C தொடக்கம் 16C ஆக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.    

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார் ரவீந்தர்?

  • January 8, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பைனலை நெருங்கிவிட்டது. தற்போது செளந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், தீபக், அருண், விஷால், பவித்ரா, ரயான் ஆகிய 8 போட்டியாளர்கள் தான் களத்தில் உள்ளனர். இதில் புது ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன முதல் 8 போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் இந்த வாரத்தில் மிட் வீக் எவிக்‌ஷன் நடத்தி ஒரு போட்டியாளரை வெளியேற்றலாம் என்கிற பவரையும் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் […]

இலங்கை

இலங்கை – சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்களின் மோசமான செயற்பாடு!

  • January 8, 2025
  • 0 Comments

சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரை தடுக்கும் பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றுலா வீசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுவதாகவும், அதனை அரசாங்கம் பிரச்சினையாக இனங்கண்டுள்ளதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம், மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொறிமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேலிய […]

ஆசியா

அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களின் சேகரிப்பை விரிவுப்படுத்தும் வடகொரியா!

  • January 8, 2025
  • 0 Comments

அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களின் சேகரிப்பை போட்டி நாடுகளுக்கு எதிராக மேலும் விரிவுபடுத்துவதாக வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங் உன் சபதம் செய்துள்ளார். தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் லீ சங் ஜூன் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நேற்று வடகொரியா சோதனை செய்தது. ஏவுகணை ஒலியின் 12 மடங்கு வேகத்தில் 930 மைல்கள் பறந்ததாக வட கொரியா கூறியிருந்தது. […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல!

  • January 8, 2025
  • 0 Comments

உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08)  பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நம் நாட்டில் ஹவாலா மற்றும் உண்டியல் முறை சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அது எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த ஹவாலா மற்றும் உண்டியல் முறை மூலம் சர்வதேச அளவில் பணப் […]

ஆசியா

திபெத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

  • January 8, 2025
  • 0 Comments

சீனாவின் திபெத்தில் உள்ள ஷிகாஸ்டே நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீன மத்திய அரசு வழங்கிய முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளன. குறித்த பகுதிகளுக்கு நேற்று (07) இரவு நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் மற்றும் தேசிய உணவு மற்றும் சேமிப்பு நிர்வாகத்தால் தொடர்புடைய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதில் ஏறக்குறைய 6,000 கூடாரங்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் உடைகள் உள்ளடங்கியதுடன் மேலும் 16,000 நிவாரணப் பொருட்கள் […]

ஆசியா

திபெத் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு

  • January 8, 2025
  • 0 Comments

திபெத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறைந்தது 126 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 188 பேர் காயமடைந்ததாகவும் சீன அரசுக்குச் சொந்தமான சிசிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டது. நிலநடுக்கம் காரணமாக நேப்பாளத்திலோ வேறு இடத்திலோ யாரும் மரணமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இமாலய மலைப்பகுதிகளின் மலையடிவாரத்தில் 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகச் சீன அதிகாரிகள் கூறினர்.30,000க்கும் மேற்பட்டோர் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவானது. […]

பொழுதுபோக்கு

ஹன்சிகா மீது போலீசில் பரபரப்பு புகார்… திரையுலகில் பெரும் அதிர்ச்சி

  • January 8, 2025
  • 0 Comments

ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை, ஹன்சிகாவின் அண்ணன் மனைவியான தொலைக்காட்சி நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸ் கொடுத்துள்ளார். ஹன்சிகாவும், அவரின் தாயார் மோனாவும் தன்னை கொடுமை படுத்துவதாக கூறி, இருவர் மீதும் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நடிகை ஹன்சிகாவின் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், ஹன்சிகா நேரடியாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் அவரது சமூக ஊடகப் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

  • January 8, 2025
  • 0 Comments

வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளைக் கடத்திவந்ததாகக் கூறப்படும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவிலிருந்து வருகை தந்த 66 வயதுடைய பொஸ்னிய நாட்டு பிரஜையொருவரே சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். குறித்த நபரிடமிருந்து இரண்டரை கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

அமரன் 100 நாள் வெற்றி கொண்டாட்டம்.. வருவாரா கமல்.?

  • January 8, 2025
  • 0 Comments

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் எதார்த்தமாகவும் மனதை தொடும் விதமாகவும் அமைந்தது சில படங்கள் தான். அதில் அமரன் படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இப்படத்தில் நடித்திருந்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பதிவு தான் இப்படம். இதில் ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களும் சாய் பல்லவியின் நடிப்பும் சிவகார்த்திகேயனின் ஆக்சனும் வேற லெவலில் இருந்தது. அதனாலயே பார்வையாளர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். கடந்த […]