வட அமெரிக்கா

நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்ற விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சடலங்கள்

  • January 8, 2025
  • 0 Comments

நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்ற JetBlue விமானத்தின் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது. நேற்று முன்தினம் இந்த விமானத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. சடலங்களின் அடையாளங்கள் தெரியவில்லை. விமானம் தரையிறங்கிய பிறகு நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது அவை கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் எப்படி தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர், அவர்களது அடையாளம் ஆகியவை விசாரிக்கப்படுகின்றன. ஆவணமற்ற குடியேறிகள் சில சமயம் அவ்வாறு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கை செய்தி

இலங்கையில் பதிவு செய்யப்படாத கைப்பேசிகள் இம்மாதத்துடன் செயலிழக்கும்

  • January 8, 2025
  • 0 Comments

கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது. கால அவகாசம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தங்களது ஆணைக்குழுவில் IMEI இலக்கத்தைப் பதிவு செய்யாத கைத்தொலைபேசிகளில் குறித்த கால அவகாசத்தின் பின்னர் தொலைபேசி வலையமைப்பு இயங்காது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் IMEI இலக்கத்தைப் பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது எனவும் இலங்கை […]

வாழ்வியல்

10 வீதமான நீரிழிவு நோயாளிகளுக்கு நோய்க்காரணியாகிய இனிப்பு பானங்கள்

  • January 8, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்து உட்பட உலகளவில் நீரிழிவு நோயாளிகளில், 10வீதமானோருக்கு, இனிப்பு பானங்களே நோய்க்காரணியாக உள்ளது என்று, நேச்சர் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. அத்துடன், 30 வகையான இருதய நோய்களில் ஒன்று, இனிப்பு பானங்களின் நுகர்வுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், 2020 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட ரைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 10.5% மானோர், குளிர்பானங்களை அருந்துபவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதய நோய்களின் விடயத்தில், குளிர்பானங்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

எடையைக் குறைக்க AI ஐப் பயன்படுத்துவதற்கான வழியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியா

  • January 8, 2025
  • 0 Comments

எடையைக் குறைக்கும் செயல்பாட்டில் AI தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு அடையாளம் கண்டுள்ளது. “My Journey” என்று அழைக்கப்படும் இந்த AI கருவி Commonwealth Scientific and Industrial Research Organization (CISRO) பரந்த வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே, ஒரு நபரின் உடல்நலத் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த நபருக்கு ஏற்றவாறு இலக்கு எடை இழப்புத் திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம் ஒருவரின் உடல் எடையை விரைவில் குறைக்க […]

செய்தி

அமெரிக்காவில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 10,000 வீடுகள் மற்றும் 13,000 கட்டிடங்கள் ஆபத்தில்

  • January 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருகின்றது. சுமார் 20 ஏக்கர் சிறிய நிலப்பரப்பில் தொடங்கிய காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 1,200 ஏக்கருக்குப் பரவி, அப்பகுதியில் உள்ள 10,000 வீடுகள் மற்றும் 13,000 கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலியின் கூற்றுப்படி, 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை மக்களுக்கு குறுந்தகவல் தொடர்பில் அவசர எச்சரிக்கை

  • January 8, 2025
  • 0 Comments

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மரணமடைந்தவரின் மூளையிலிருந்து நினைவுகளை மீட்டெடுக்கலாமா?

  • January 8, 2025
  • 0 Comments

மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர்களில் ஒன்று, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான். நம் உடல் செயலிழந்தாலும், நம் நினைவுகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் என்னாகின்றன? இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா? நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள், நம் நினைவுகள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் சேமிக்கப்படுவதாகக் கூறுகின்றன. குறிப்பாக, ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்ற பகுதி குறுகிய கால மற்றும் நீண்ட கால நினைவுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நினைவும் மூளையில் உள்ள நியூரான்கள் […]

உலகம் செய்தி

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம் -126 பேர் மரணம், 180 பேர் காயம்

  • January 8, 2025
  • 0 Comments

திபெத்தின் ஷிகாட்சே நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 126க்கு உயர்ந்திருக்கிறது. மேலும் 180 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்தியாவின் சில பகுதிகளிலும் நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவிலும் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டதாய்க் கூறப்படுகிறது. ஏறக்குறைய 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விளையாட்டு

தொடர் தோல்வியால் ICC டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

  • January 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. சிட்னியில் கடந்த ஜனவரி 5ம் திகதி முடிவடைந்த இந்த போட்டியில், தோல்வியடைந்ததன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைக்கத் தவறியது. இந்தத் தொடரில் இந்திய அணி, பேட்டிங்கில் மிகவும் படு மோசமாக செயல்பட்டது. அது தான் தோல்விக்கான முக்கிய காரணமாகவும் […]

ஆசியா

உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – மீண்டும் முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

  • January 8, 2025
  • 0 Comments

உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளதென VisaGuide.World இணையத்தளம் தெரிவித்தது. விசா இல்லாத அனுமதி, மின்னிலக்கப் பயணச் சான்றிதழ், மின்னிலக்க விசா, தரையிறங்கியதும் வழங்கப்படும் விசா ஆகிய நிபந்தனைகளை வைத்துத் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது. 199 நாடுகள், வட்டாரங்களிடையே சிங்கப்பூருக்கு 91.27 புள்ளிகள் கிடைத்தன. பின்லந்து, ஸ்பெயின், ஜப்பான், டென்மார்க், இத்தாலிஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்தன. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், விசா இன்றி 159 நாடுகளுக்குச் செல்லலாம். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையிலும் சிங்கப்பூர் […]