இந்தியா – நியூஸிலாந்து கடைசி டெஸ்ட்: போராடும் இந்திய அணி
இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டு இரண்டு அணிகளும் சம அளவில் இருக்கின்றன. மும்பை ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படவேண்டும் எனவும் முதல் நாளிலிருந்து சுழற்சி இருக்கவேண்டும் எனவும் மும்பை மைதான பராமரிப்பாளரை இந்திய அணி முகாமைத்துவம் கோரியிருந்தது. அப்படி இருந்தும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்களை வீழ்ந்தி இந்தியாவை துவம்சம் செய்த மிச்செல் […]













