கனடாவில் காலிஸ்தான்களுக்கு எதிராக போராட்டம்
கனடாவில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் கொடியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வம்சாவளியினர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலுக்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். மூவர்ணக் கொடிகளுடன் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். இந்த போராட்டத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களும் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் சாலை மறியல் செய்தனர். கனேடிய அரசியல் கட்சிகளுக்கான ஆதரவை இந்துக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். […]













