இலங்கை

இலங்கை : வீட்டு வசதிகளை கோரிய 35 எம்.பி.கள்!

  • November 23, 2024
  • 0 Comments

35 புதிய எம்.பி.க்கள் மடிவெல வீடமைப்பு வளாகத்தில் வீட்டு வசதிகளை கேட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த எம்.பி.க்கள் தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றர் சுற்றளவிற்கு வெளியே வசிப்பவர்களுக்கு இந்த வளாகத்தில் வீட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில், 110 எம்.பி.,க்களுக்கு வீடு வழங்குவதற்கான வசதிகள் உள்ளன.

ஆசியா

பணியாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்த சீனா முன்னெடுத்துள்ள ஆச்சரிய திட்டம்!

  • November 23, 2024
  • 0 Comments

சீனாவில் பணியாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்நோக்கில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பணியாளர்கள் டேட்டிங் எப் மூலம் ஒரு புதிய கூட்டாளரை தெரிவு செய்வதற்கும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை வகுத்துள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனமான Insta360 என்ற நிறுவனமே இதனை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனம் தனது உள் டேட்டிங் தளத்தில் நிறுவனத்திற்கு வெளியே ஒரு தனி நபரை அறிமுகப்படுத்தும். இதற்காக 66 யுவான் (தோராயமாக ₹770) தொழிலாளர்களுக்கு வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் பிரிந்த நட்சத்திர ஜோடி.. இப்படி ஒரு காரணமா?

  • November 23, 2024
  • 0 Comments

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவியை விவாகரத்து செய்வதாக இவ்வருடம் அறிவித்தார். இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில் இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி இருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த சூழலில் இசையமைப்பாளராக வளம் வந்த ஜிவி பிரகாஷ் நடிகராகவும் உருவெடுத்தார். இந்நிலையில் ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். இப்போது மீண்டும் இவர்கள் இணையும் செய்தி ரசிகர்களை […]

வட அமெரிக்கா

கனடாவில் இராணுவ செலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள அமெரிக்கா!

  • November 23, 2024
  • 0 Comments

கனடாவின் தற்போதைய இராணுவச் செலவுத் திட்டங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அந்நாட்டு அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என  அமெரிக்க செனட்டர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். நேட்டோ புள்ளிவிவரங்களின்படி, கனடா 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.33% இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் செலவழிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது நேட்டோ நாடுகள் தங்களுக்கு நிர்ணயித்த இலக்கான 2% ஐ விட குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 2032ஆம் ஆண்டுக்குள் கூட்டணியின் இலக்கை கனடா […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிறுவன் ஒருவனுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி

  • November 23, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் சிறுவர் ஒருவருக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் சிறுவர் ஒருவர் பாதிப்படைந்திருப்பது இதுவே முதல்முறை என்று நவம்பர் 22ஆம் திகதியன்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர் செல்லும் குழந்தை பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் மற்றவர்களுக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடத்தவும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுப்பதற்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பறவைக் காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டுள்ள சிறுவர் சான் ஃபிரான்சிஸ்கோவின் அலாமேடா பகுதியைச் சேர்ந்தவர். […]

இலங்கை

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

  • November 23, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3வது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இலங்கை அதிகாரிகளும் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று (23.11) அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவமும் அதன் நிறைவேற்று சபையும் இதனை அங்கீகரித்ததன் பின்னர் இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். கொள்கைகளை தொடர புதிய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு, திட்டத்தின் நோக்கங்களை அடைய முக்கியமானது என்றும் […]

செய்தி

இங்கிலாந்தில் ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் : SWR வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • November 23, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ரயில் மற்றும் படகு நிறுவனங்கள் வார இறுதியில் சேவை மாற்றங்களை அறிவித்துள்ளனர். ஸ்காட்லாந்தில், வெஸ்ட் ஹைலேண்ட் லைன், ஹைலேண்ட் மெயின்லைன், ஸ்ட்ரான்ரேர் லைன், கிளாஸ்கோ சவுத் வெஸ்டர்ன் லைன், ஃபார் நார்த் லைன் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் மெயின்லைன் கார்ஸ்டேர்ஸ் மற்றும் பார்டருக்கு இடையே வேகக் கட்டுப்பாடுகள் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஸ்காட்ரெயில் இன்வெர்னஸிலிருந்து எல்ஜின் வரையிலும், அபெர்டீனிலிருந்து இன்வெரூரி வரையிலும், கிளாஸ்கோ குயின் ஸ்ட்ரீட் முதல் ஓபன் (Oban […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராக பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட் தேர்வு

  • November 23, 2024
  • 0 Comments

பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் திகதியன்று தெரிவித்தார். நிதி அமைச்சர் என்கிற முறையில் பொருளியல், நிதி ஒழுங்குமுறை, அனைத்துலக விவகாரங்கள் ஆகியவற்றில் அவருக்கு அதிக செல்வாக்கு இருக்கும். “அமெரிக்காவின் 79வது நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட்டை முன்மொழிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், புவிசார்ந்த அரசியல் மற்றும் பொருளியல் நிபுணர்களில் அவரும் ஒருவர்,” என்று டிரம்ப் […]

இலங்கை

இலங்கையில் வரும் ஆண்டின் முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த தீர்மானம்!

  • November 23, 2024
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

இதுவரை கங்குவா செய்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

  • November 23, 2024
  • 0 Comments

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகிய கங்குவா வெளியாகி ஒரு வாரம் கடந்திருக்கிறது. சூர்யாவின் கேரியரையே இந்த படம் மாற்றும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான முதல் நாளை நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது. இதுவே படத்தின் கலெக்ஷன் பாதிப்புக்கு காரணமாக அமைந்தது. சிலர் வேண்டுமென்றே இவ்வாறு நெகட்டிவ் விமர்சனத்தை பரப்புவதாகவும் கூறப்பட்டது. அதோட இனிமேல் தியேட்டர் வாசலில் யூடியூப்பர் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கூறப்பட்டது. மேலும் ஜோதிகாவும் கங்குவா படத்தின் […]