இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

யாழ்.மாவட்ட எம்.பி அர்ச்சுனாவின் பேஸ்புக் கணக்குகள் ஆய்வு – நடவடிக்கைக்கு தயாராகும் சபாநாயகர்

  • November 25, 2024
  • 0 Comments

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமூக வலைத்தள கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், புதிய உறுப்பினர் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து ஆலோசிப்பதாகவும், அவரது அனைத்து முகநூல் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு எதிர்காலத்தில் முறையான ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறினார். […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

தென் கொரியாவில் கட்டாய இராணுவச் சேவை – அச்சத்தில் எடையை வளர்த்த நபர்

  • November 25, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் கட்டாய இராணுவச் சேவையைத் தவிர்ப்பதற்காக நபர் ஒருவர் வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்துள்ளார். 26 வயதான இளைஞன் அரசாங்கத்தை ஏமாற்றியதற்காக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்ன சாப்பிட்டால் எடை கூடி ராணுவச் சேவையில் இருந்து தப்பலாம் என்று யோசனை கொடுத்த நண்பருக்கு ஆறு மாதச் சிறை. அதுவும் ஒத்தி வைக்கப்பட்டது. இராணுவத்திற்கான உடல் பரிசோதனைக்கு முன்பு நபர் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளத் தொடங்கியுள்ளார். முதல் பரிசோதனையில் அவர் […]

வாழ்வியல்

30 வயதிற்குள் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்

  • November 25, 2024
  • 0 Comments

மகளிர் அனைவருக்குமே, தங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து அறிவை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். நிதி குறித்த அறிவு: இளம் வயது முதலே, சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும், கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது எப்படி, கடன் வாங்கினால் அதை சரியாக செலுத்துவது எப்படி போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இது, எதிர்கால சேமிக்குகளுக்கும், நிதி சுதந்தித்திற்கும் உதவும். டிஜிட்டல் அறிவு: […]

அறிந்திருக்க வேண்டியவை இன்றைய முக்கிய செய்திகள்

உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் முதல் இடத்தை பிடித்த ஐரோப்பிய நாடு

  • November 25, 2024
  • 0 Comments

World of Statistics இணையதளம் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 160 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த தரவரிசையில் ஐஸ்லாந்து முதலிடத்தையும், அயர்லாந்து இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் பெற்றுள்ளன, ஆறு மற்றும் ஏழாவது இடங்களை சுவிட்சர்லாந்து மற்றும் போர்ச்சுகல் பெற்றுள்ளன. உலகின் அமைதியான நாடுகளின் முதல் 10 பட்டியலில் டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் […]

செய்தி

தரையிறங்கும்போது தீப்பற்றிய ரஷ்ய விமானம் – பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

  • November 25, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் Azimuth ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியின் அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமான இயந்திம் தீப்பற்றியததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். விமானத்தில் இருந்த 90க்கும் அதிகமான பயணிகளும் விமானிகளும் வெளியேற்றப்பட்டனர். அது ரஷ்யாவின் சொச்சி நகரிலிருந்து துருக்கியின் அன்டால்யா நகருக்கு வந்து கொண்டிருந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. அதிகாலை மூன்று மணி வரை அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ராணுவ விமான நிலையத்தைத் தற்காலிகமாகப் பயன்படுத்தின. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு அனுமதி – மனித மூளையில் நேரடியாக இணைக்கப்படும் சிப்

  • November 25, 2024
  • 0 Comments

எலான் மஸ்க் நிறுவிய நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் நேரடியாக இணைக்கப்படும் ஒரு சிப்பை உருவாக்கி, அதை மருத்துவ உலகில் ஒரு புரட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சிப், பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கனடாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நியூராலிங்க் என்பது மனித மூளைக்கும் கணினிக்கும் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்தும் […]

இலங்கை

இலங்கையின் புதிய அமைச்சர்களுக்கு வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

  • November 25, 2024
  • 0 Comments

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களையே இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் பயன்படுத்துவார்கள் என அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் சிக்கமான மற்றும் சொகுசு இல்லாத வாகனம் வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். அதற்கமைய, புதிய அரசாங்கத்தின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ வாகனமாக ஏதாவது ஒரு வாகனம் கிடைக்குமென அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு புதிய உத்தியோகபூர்வ வாகனங்கள் கிடைக்காது எனவும், கடந்த […]

விளையாட்டு

முதல் நாள் மெகா ஏலம்! தற்போது வரை அணிகள் வாங்கிய வீரர்களின் விபரம்

  • November 25, 2024
  • 0 Comments

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த மெகா ஏலமானது பயங்கர விறுவிறுப்பாகவே சென்றது. அதன்படி,  முதல் நாளில் நடந்த பல மாற்றங்கள் வரும் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களை கவரும் வண்ணமே அமைந்துள்ளது. அதன்படி, பல அதிரடி மாற்றங்களும், போட்டிகளும்நடைபெற்றது. ஆகையால், முதல் நாளில் ஏலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும், முதல்  நாள் நிறைவில் 10 அணிகள் எடுத்திருக்கும் வீரர்களின் பட்டியலையும், ஒவ்வொரு அணிகளிடம் மீதம் இருக்கும் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கடுமையாக்கப்பட்ட சட்டம்! 10,000 யூரோ வரை அபராதம்

  • November 25, 2024
  • 0 Comments

ஜெர்மனியின் புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் சந்தைகள் எதிர்வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு பொலிஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, ஜேர்மனியின் கூரிய ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கான புதிய தடையை அமுல்படுத்துவது உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கத்தி தடையை மீறினால் 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் நான்சி பேசர் தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் மேற்கு நகரமான சோலிங்கனில் நடந்த […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல் – ஏமாற்றத்தில் மக்கள்

  • November 25, 2024
  • 0 Comments

இலங்கையில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த நிலைமைக்கு காரணம் என ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அப்போது முன்வைத்த மின்சாரக் கட்டணக் குறைப்பு போதாது […]