உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் முதல் இடத்தை பிடித்த ஐரோப்பிய நாடு
World of Statistics இணையதளம் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
160 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த தரவரிசையில் ஐஸ்லாந்து முதலிடத்தையும், அயர்லாந்து இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் பெற்றுள்ளன, ஆறு மற்றும் ஏழாவது இடங்களை சுவிட்சர்லாந்து மற்றும் போர்ச்சுகல் பெற்றுள்ளன.
உலகின் அமைதியான நாடுகளின் முதல் 10 பட்டியலில் டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த தரவரிசையின்படி ஆஸ்திரேலியா 19வது இடத்தை பிடித்துள்ளதும் சிறப்பம்சமாகும்.
(Visited 18 times, 1 visits today)