ஆசியா

பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் சிறப்பு நடவடிக்கை – 8 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

  • December 6, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சவுத் வசீரிஸ்தான் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை பற்றிய ரகசிய தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படை தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டனர். சவுத் வசீரிஸ்தானுக்கு உட்பட்ட சாராரோகா பகுதியில் நடந்த இந்த சோதனையில் கார்ஜி தலைவரான கான் முகமது என்ற கோரியாய் என்பவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். லக்கி மார்வாத் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர, 2 பயங்கரவாதிகள் […]

பொழுதுபோக்கு

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்…

  • December 6, 2024
  • 0 Comments

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிகளின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே உறவு சரியில்லை என்று தொடர்ந்து செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கூட இருவரும் சேர்ந்து வருவதை தவிர்த்து வருகின்றனர். விவாகரத்து தொடர்பான சோசியல் மீடியா பதிவுகளுக்கு அபிஷேக் பச்சன் ஆதரவாக பதிவிட்டு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்ள யூத ஆலயதிற்கு தீ வைப்பு : சந்தேகத்துக்குரிய இருவரை தேடும் பொலிஸார்

  • December 6, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் யூத வழிபாட்டு தலத்தில் வேண்டுமென்றே தீ மூட்டியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரைத் தேடி வருவதாக ஆஸ்திரேலிய காவல் துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தெரிவித்தது. மெல்பர்ன், ரிப்போன்லியா நகரின் தென்கிழக்கில் உள்ள அந்த இடத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.10 மணி அளவில் ஏற்பட்ட தீ, 40 நிமிட போராட்டத்துக்குப் பின்னர் அணைக்கப்பட்டது. யூதர்களுக்கு எதிரான உணர்விற்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ஆண்­டனி அல்­ப­னிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒரு வழிபாட்டுத் தலத்தில் […]

பொழுதுபோக்கு

புஷ்பா 2 பேரிழப்பு – அதிகாலை காட்சிக்கு தடை விதித்து தெலுங்கானா அதிரடி

  • December 6, 2024
  • 0 Comments

அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று புஷ்பா 2 வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனாலேயே நேற்று படத்தை காண ரசிகர்களின் கூட்டம் தியேட்டரில் அலை மோதியது. அதேபோல் இரவு 10:30 மணிக்கு சிறப்பு காட்சி ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. அது மட்டும் இன்றி அதை ரசிகர்களுடன் காண அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தார். அதுதான் மிகப்பெரும் சம்பவத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடிபாடுகளில் […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் மின்சாரம் மற்றும் எரிவாயு சந்தைகளுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!

  • December 6, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் எதிர்காலத்தில்  மின்சாரம் மற்றும் எரிவாயு சந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. மொத்த எரிசக்தி சந்தைகளின் மேற்பார்வை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கூட்டாட்சி சட்டத்திற்கு  மாநில கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. நியாயமான எரிசக்தி விலைகளை உறுதி செய்வதே இந்த சட்டத்தின்  நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவுக்கான புதிய சீன தூதராக முன்னாள் செனட்டர் டேவிட் பெர்டூ நியமனம்

  • December 6, 2024
  • 0 Comments

சீனாவுக்கான அமெரிக்கத் தூதராக முன்னாள் செனட்டர் டேவிட் பெர்டூவைத் தாம் தேர்ந்து எடுத்திருப்பதாக, அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “வட்டார அமைதியைக் கட்டிக்காக்கும் தமது உத்தியை டேவிட் பெர்டூ திறம்படக் கையாள்வார் மேலும், சீனாவின் தலைவர்களுடனான உறவைப் பேணுவதில் ஆற்றலுடன் அவர் செயல்படுவார்,” என்று தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். 2025 ஜனவரி 20ஆம் திகதி அதிபர் பதவியை ஏற்க உள்ள டிரம்ப், சீனாவின் இறக்குமதிப் […]

இலங்கை

கொலை செய்யப்பட்டு கழிவறை குழியில் வீசப்பட்ட சிறுமி : இலங்கையில் சம்பவம்!

  • December 6, 2024
  • 0 Comments

இலங்கையில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு அவரது சடலம் கழிவறை குழியல் வீசப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த குறித்த சிறுமி, கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பில் தனது 02ஆவது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியைக் கொன்று, நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்புறமுள்ள கழிவறையில் சடலத்தை வைத்து […]

பொழுதுபோக்கு

தியேட்டரில் பறிபோன உயிர்… அல்லு அர்ஜூன் மீது வழக்கு! போலீசார் அதிரடி

  • December 6, 2024
  • 0 Comments

ஐதராபாத் தியேட்டரில் பெண் பலியான சம்பவத்தில் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதியப்படும் என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா – ஃபகத் ஃபாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இப்படம் நேற்று உலகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் ரிலீஸானது. ஐதராபாத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கினர். அதிகாலை வெளியான இப்படத்தைப் பார்க்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் கூடினர். ரசிகர்கள் படத்தைப் […]

இலங்கை

இலங்கையில் சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை – இளைஞனின் மோசமான செயல்

  • December 6, 2024
  • 0 Comments

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் மோசடி செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக தம்மை தொடர்பு கொண்ட நபரை இணையத்தின் ஊடாக பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஏமாற்றி 05 இலட்சத்திற்கு மேல் கணக்கு காட்டியுள்ளார் இந்த இளைஞன். இதனடிப்படையில், வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மோசடியில் சிக்கிய நபர் கைது […]

ஐரோப்பா

டார்ராக் புயல் : பிரித்தானியாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  • December 6, 2024
  • 0 Comments

டார்ராக் புயல் நெருங்கி வருவதால் பிரித்தானியா முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவத்தின் நான்காவது பெயரிடப்பட்ட புயல் கரையை கடக்கும்போது 80 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், மழையுடனான வானிலை நிலவும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் மேற்கு கடற்கரை, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மிக மோசமான காற்று நாளை (07.12) முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு […]