இந்தியா செய்தி

தமிழகத்தில் சாலை விபத்தில் 2 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்

  • December 12, 2024
  • 0 Comments

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை என்ற இடத்தில் லாரி மீது ஆல்டோ கார் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் இரவிபேரூரைச் சேர்ந்த 60 வயது ஜேக்கப் ஆபிரகாம் அவரது 55 வயது மனைவி ஷீபா மற்றும் அவர்களது 2 மாத பேரன் ஆரோன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜேக்கப், ஷீபா தம்பதியரின் மகளும், ஆரோனின் தாயுமான 21 வயது அலீனா ஆபத்தான நிலையில் […]

ஆசியா செய்தி

இந்தியாவுக்குள் நுழைவதற்காக ஆற்றின் குறுக்கே நீந்திச் சென்ற வங்கதேச நபர் கைது

  • December 12, 2024
  • 0 Comments

பதினேழு வயது இந்துப் பெண் இந்தியாவைக் கடந்த ஒரு நாளுக்குப் பிறகு, மற்றொரு பங்களாதேஷ் நாட்டவர் ஒரு ஆற்றின் குறுக்கே நீந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். 21 வயதான ஜிபான் பர்மன் என அடையாளம் காணப்பட்ட மாணவர், சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பங்களாதேஷிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டார். அவர் கொரோட்வா ஆற்றின் குறுக்கே நீந்தி மேற்கு வங்காளத்தின் ராஜ்கஞ்ச் பகுதியை அடைந்தார், அங்கு அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் ரங்பூர் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதியினர் கைது

  • December 12, 2024
  • 0 Comments

கனடா(canada) ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தமிழ் தம்பதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். 37 வயதான கணவன் மீது மீது 8 குற்றச்சாட்டுகளும், மனைவி மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் […]

இலங்கை செய்தி

குற்றப் புலனாய்வு வரை சென்ற கல்வித் தகைமை விவகாரம்

  • December 12, 2024
  • 0 Comments

சபாநாயகர் அசோக் சபுமல் ரங்வலவின் கல்வித் தகைமை விவகாரம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வரை சென்றுள்ளது. பல ஜனதா பெரமுனவின் மகரம் அமைப்பாளர் தினேஷ் அபேகோன் இவ்விடயமாக இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். சபாநாயகரின் பேராசிரியர் கல்வித் தகுதி குறித்து விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அவர் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னரும் இவரால் பிரயோகிக்கப்பட்ட பேராசிரியர் கல்வித் தகுதி குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவுகிறது சபாநாயகருக்கு இத்தகைமை […]

உலகம் செய்தி

கைலியன் எம்பாப்பே மீதான கற்பழிப்பு விசாரணையை முடித்த ஸ்வீடன்

  • December 12, 2024
  • 0 Comments

ஸ்டாக்ஹோமில் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ரியல் மாட்ரிட் முன்கள வீரர் கைலியன் எம்பாப்பே மீது நடத்தப்பட்ட விசாரணை போதிய ஆதாரங்கள் இல்லாததால் மூடப்பட்டதாக ஸ்வீடன் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். உலகக் கால்பந்தின் மிக உயர்ந்த வீரர்களில் ஒருவரான 25 வயதான பிரெஞ்சு வீரர் எம்பாப்பே, நேஷன்ஸ் லீக் போட்டிக்கான தனது நாட்டின் அணியில் இருந்து வெளியேறிய பின்னர், ஸ்வீடிஷ் தலைநகருக்கு அக்டோபர் 9-11 தேதிகளில் ஒரு குழுவினருடன் விஜயம் செய்தார். அக்டோபர் 10 […]

இலங்கை செய்தி

440 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

  • December 12, 2024
  • 0 Comments

இந்தியாவிலிருந்து கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி உள்ளிட்ட பலவகையான அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக, அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி, அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை, தனியார் துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம், அரிசிக்கான அதிகபட்ச விற்பனை […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம்

  • December 12, 2024
  • 0 Comments

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை

  • December 12, 2024
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் J.D. ராஜகருணா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் ஒன்று திரும்பிச் சென்றதாக வெளியான செய்தி தொடர்பான உண்மைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது. குறித்த எரிபொருள் கொள்கலன் கப்பல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கொண்டுவரப்பட்ட கப்பல் அல்ல எனவும், எனவே அது தொடர்பில் எம்மால் தலையீட்டினை செலுத்த முடியாது எனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் […]

இலங்கை செய்தி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தப் போராட்டம் 

  • December 12, 2024
  • 0 Comments

தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறு கோரியும் இடநெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தியும் அம்பாறை மாவட்டம், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது, தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித்தருமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் […]

செய்தி விளையாட்டு

சதுரங்கத்தில் உலக சாம்பியனானார் குகேஷ்

  • December 12, 2024
  • 0 Comments

இந்தியாவின் குகேஷ் சதுரங்கத்தில் சரித்திரம் படைத்தார். 18 வயதான அவர், உலக சாம்பியன்ஷிப்பின் கடினமான சுற்றுகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இப்போது சதுரங்கத்தின் முடிசூடா மன்னராக உள்ளார். சென்னையில் பிறந்த இவர், தற்போது உலக பட்டத்தை வென்ற இளையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பதினான்காவது சுற்றுப் போட்டியில் நடப்புச் சாம்பியனான டிங் லிரனை ஏழரைப் புள்ளிகளுடன் வீழ்த்தி அபாரமான சாதனையை எட்டினார் குகேஷ். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு உலக சாம்பியன் பிறந்துள்ளார் குகேஷ். 14 […]