இலங்கை செய்தி

மகிந்தானந்த ஏன் ரணிலுக்கு ஆதரவளிக்கிறார்?

  • September 9, 2024
  • 0 Comments

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அபிலாமிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி இந்த நாட்டு மக்களின் பொருளாதாரத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர்  ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக நாவலப்பிட்டியில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்திருந்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சவாலுக்கு முகம் கொடுக்க எவரும் […]

இலங்கை செய்தி

சஜித்துக்கு ஆதரவாக திரும்பிய மஹிந்தவின் ஆதரவாளர் கீதா குமாரசிங்க

  • September 9, 2024
  • 0 Comments

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இணைந்துகொண்டார்.

ஐரோப்பா

அனைத்து நில எல்லைகளிலும் தற்காலிக கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள ஜெர்மனி!

ஜேர்மனியின் அரசாங்கம் நாட்டின் அனைத்து நில எல்லைகளிலும் தற்காலிக எல்லைக் கட்டுப்பாடுகளை அறிவித்தது, இது ஒழுங்கற்ற குடியேற்றங்களைச் சமாளிக்கும் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி, முதலில் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “நாங்கள் உள் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறோம் மற்றும் ஒழுங்கற்ற இடம்பெயர்வுக்கு எதிரான எங்கள் கடுமையான போக்கை தொடர்கிறோம்” என்று உள்துறை […]

உலகம் செய்தி

பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகவாசிகளின் உடல்கள்

  • September 9, 2024
  • 0 Comments

பூமியில் வேற்று கிரகவாசிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வேற்று கிரகவாசிகள் குறித்த அனைத்து தகவல்களும் அமெரிக்க அரசுக்கு தெரியும் எனவும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சியாளர் லூயிஸ் எலிசாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.       ஏலியன் தொழிநுட்பத்தை படிப்பதில் தான் பொறுப்பு என்றும், பென்டகனில் வேற்று கிரக வாழ்க்கையின் தலைவன் தான் என்றும் எலிசாண்டோ கூறினார். கடந்த 20ஆம் திகதி, லூயிஸ் எலிசாண்டோ இன்சைட் தி பென்டகன்ஸ் ஃப்ளையிங் மேன்ஹன்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டார், அது குறித்த […]

செய்தி விளையாட்டு

மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி – தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

  • September 9, 2024
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து ஆல் […]

இலங்கை செய்தி

விமானப்படை வீராங்கனை கடத்தல் – தந்தை மகன் கைது

  • September 9, 2024
  • 0 Comments

விமானப்படை வீராங்கனையை கடத்திய சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். சீன துறைமுக விமானப்படை தளத்தில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரும் அவரது தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் வறக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடத்தப்பட்ட விமானப்படை வீராங்கனை தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் விமானப்படை வீராங்கனையை […]

இலங்கை செய்தி

யாழில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

  • September 9, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி 03ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடம் ஒன்றின் அருகில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்ட நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண தடயவியல் பொலிஸாரும் சம்பவ […]

இலங்கை செய்தி

சிங்கள மக்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

  • September 9, 2024
  • 0 Comments

தெற்கில் வாழும் தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா கோரியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளர் தான் தமிழ் மக்களுக்கு தேவை. சங்கே தமிழர்களின் அடையாளம். அதனால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்களின் குரலை வலுப்படுத்தவேண்டும் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு 440 மில்லியன் ஆதரவுப் பொதியை அறிவித்துள்ள ஸ்வீடன்

ஸ்வீடன் தனது 17வது உதவிப் பொதியை உக்ரைனுக்கு மேலும் இராணுவ ஆதரவுடன் மொத்தம் 4.6 பில்லியன் ஸ்வீடிஷ் கிரீடங்கள் ($443 மில்லியன்) அனுப்பும் என்று பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் தெரிவித்தார். புதிய தொகுப்பில் ஸ்வீடனால் ஏற்கனவே வழங்கப்பட்ட காலாட்படை சண்டை வாகனங்களுக்கான வெடிமருந்துகளும், எதிர்காலத்தில் க்ரிபென் போர் விமானங்களை மாற்றுவதற்கு உதவும் கொள்முதல்களும் அடங்கும், இருப்பினும் அத்தகைய பரிமாற்றம் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. “ஒரு சாத்தியமான பிற்பகுதியில் உக்ரைனுக்கு கிரிபென்ஸை நன்கொடையாக வழங்கும் திறனை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முதல் முறையாக நிலவில் 250க்கும் மேற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்த சந்திரயான் 3

  • September 9, 2024
  • 0 Comments

நிலவில் ஏற்பட்ட 250க்கும் மேற்பட்ட அதிர்வுகளை இந்திய விண்கலம் சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது.இதுபோன்ற அதிர்வுகளை அது பதிவு செய்திருப்பது இதுவே முதல்முறை. பதிவு செய்யப்பட்ட அதிர்வுகளில் 50 மிகத் தெளிவாகப் பதிவாகின. சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவரின் நடமாட்டத்துக்கும் இந்த அதிர்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. நிலவின் தென்துருவப் பகுதியில் அதிர்வுகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.