செய்தி

பூமிக்குத் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

  • August 22, 2024
  • 0 Comments

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ரொக்கெட் மூலம் இந்திய வம்சாவளியான 58 வயதுடைய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 61 வயதுடைய மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மே 05ஆம் திகதி விண்வெளிக்குப் பயணத்தை மேற்கொண்டனர். குறித்த இருவரும் திட்டமிட்டபடி கடந்த மே 22ஆம் திகதி பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். […]

செய்தி தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த நடிகர் விஜய்

  • August 22, 2024
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்து, சிறப்புப் பாடலையும் வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் நம் கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் என்று […]

செய்தி

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • August 22, 2024
  • 0 Comments

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் எதிர்வு கூறியுள்ளது. எவ்வாறாயினும் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை பதிவாகக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு […]

வாழ்வியல்

தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • August 22, 2024
  • 0 Comments

இரவு தூங்கி காலையில் எழும்போது தலையணையில் வெள்ளை கரை படிந்து ஆங்காங்கே இருக்கும் அனுபவம் பலருக்கும் இருக்கும். 100 ல் 75 சதவிகிதம் நபர்களுக்கு தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கும். இது சில சமயங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது தொந்தரவுகளை ஏற்படுத்தும். குழந்தையில் இருப்பது தவறில்லை ஆனால் பெரியவர்கள் ஆகியும் இவ்வாறு இருப்பதை எளிதில் கடந்து செல்லக்கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர் தனக்கீர்த்தி இதைப் பற்றி கூறுகையில் பொதுவாக மனிதர்களின் உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்

  • August 22, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.91 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.05 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.19 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வட அமெரிக்கா

டிரம்பை சிறையில் அடைக்க அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

  • August 22, 2024
  • 0 Comments

செய்யாத தவறுக்கு தன்னை சிறையில் அடைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து வருவதாக டிரம்பை குற்றம்சாட்டினார். அமெரிக்காவில், கடந்த மாதம் 13-ம் திகதி, தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்பை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவத்துக்குப் பின் முதன்முறையாக அவர் திறந்தவெளி பிரச்சாரம் மேற்கொண்டார். அருகே இருந்த கட்டடங்களின் மேல் மாடியில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் இருந்தபடி உளவுத்துறை அதிகாரிகள் கண்காணிக்க, குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்புகளுக்கு பின் நின்றபடி டிரம்ப் உரையாற்றினார். ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் மரணம்

  • August 22, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் பிராட்போர்டில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். 29 வயதான Bryony Gavit மற்றும் அவரது 09 வயது மகள் Denise Burtle, 05 வயது மகன் Oscar Burtle மற்றும் இளைய மகள் Aubree Burtle ஆகியோர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்கு யார்க்ஷயர் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கூகுள் பிளே ஸ்டோரில் அதிரடி மாற்றங்கள் – அமுலாகும் புதிய விதிகள்

  • August 22, 2024
  • 0 Comments

கூகுள் ப்ளே ஸ்டோரில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கப்படும் வகையில் கூகுள் பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றலாம். புதிய தரக் கட்டுப்பாட்டை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரின் விதிகளில் பெரிய மாற்றம் கூகுள் ப்ளே ஸ்டோரில் பல தீங்கிழைக்கும் செயலிகள் பல மறைந்துள்ள நிலையில், அவற்றை முற்றிலும் நீக்க, இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது. கூகுள் தனது பிளே ஸ்டோரின் […]

விளையாட்டு

ஐபிஎல் தொடரால் கிடைத்த இலாபம் – பணமழையில் பிசிசிஐ!

  • August 22, 2024
  • 0 Comments

இந்தியாவில் கிரிக்கெட் தொடர் அதிகமானாரோல் பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட்டை பார்க்கின்றனர். அதேபோலவே, மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டில்தான் அதிக வியாபாரமும் நடக்கிறது. குறிப்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் அதிக வருவாயை ஈட்டும் விளையாட்டு வாரியமாக திகழ்கிறது. அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர். உலகம் முழுவதும் டி20 லீக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், அதில் நம்பர் 1 டி20 லீக்காக ஐபிஎல் திகழ்கிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் முன்னாள் கணவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • August 22, 2024
  • 0 Comments

பிரான்ஸில் Pontault-Combault (Seine-et-Marne) நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைத்து பெண் ஒருவர் கத்தியினால் குத்தப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய பெண் ஒருவர் வாங்கிக்கொண்டு சுப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறும் போது, அவரை எதிர்கொண்ட நபர் ஒருவர் அப்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் Henri Mondor மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்குதல் மேற்கொண்டது […]

error: Content is protected !!