செய்தி தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்து, சிறப்புப் பாடலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளார்.

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் நம் கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்த விஜய், கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளதுடன், அதற்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக பாடலையும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடலின் வரிகளைப் பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கின்றார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!