யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை; மருத்துவ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையொன்று நேற்று அளவெட்டி பகுதியில் உயிரிழந்தது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு குழந்தை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை […]













