விரைவில் TIN தொடர்பில் அமைச்சரவைக்கு முன்மொழிவு சமர்ப்பிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர்
வரி பதிவுக்கான வரி அடையாள எண்ணை (TIN) வழங்கும் போது தேசிய அடையாள அட்டையை (NIC) இணைத்துக்கொள்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும்போது தேசிய அடையாள அட்டை எண்ணை TIN ஆகப் பயன்படுத்த முன்மொழியப்படும் என்று அவர் மேலும் கூறினார். முன்மொழிவு தொடர்பான பரிந்துரைகள் […]













