இலங்கை

ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் தாக்குதல்: செங்கடல் பகுதிக்கு செல்லும் இலங்கை கடற்படையின் கப்பல்-கடற்படை பேச்சாளர்

செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளில் இருந்து சர்வதேச கப்பல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கை கப்பலொன்று அந்த பகுதிக்கு செல்வதற்கு தயாராகவுள்ளது என கடற்படையின் பேச்சாளர் கயன்விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இலங்கை கடற்படை தனது கப்பல்களைஅனுப்புகின்றது ஆனால் அதற்கான திகதியை இன்னமும் தீர்மானிக்கவில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். சரக்குகப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கடல் அரபிக்கடல் ஏடன்வளைகுடா மற்றும் அதனை அண்டிய கடல்பாதைகளில் இந்த கப்பலை பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய தேவைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார […]

விளையாட்டு

இலங்கை அணிக்கு 209 ஓட்ட வெற்றி இலக்கு

  • January 8, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 209 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைவர் Craig Ervine அதிகபட்சமாக 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன […]

ஆசியா

இஸ்ரேல்- ஹமாஸ் போர் : பணய கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்த கத்தார் பிரதமர்

கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது. இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களிடம், “பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக […]

பொழுதுபோக்கு

ஆதித்த கரிகாலனாக விக்ரம் – வந்தியத்தேவனாக விஜய்… படம் எப்படி இருந்திருக்கும்?

  • January 8, 2024
  • 0 Comments

கோலிவுட்டில் விஜய், விக்ரம் இருவருமே முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர். விஜய் மாஸ் காட்டினால், விக்ரம் வெரைட்டியாக நடித்து மிரள வைக்கிறார். இவர்கள் இருவரும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிக்கவிருந்தனர். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாகின. முதல் பாகம் 2022 செப்டம்பர் மாதமும், இரண்டாம் பாகம் கடந்தாண்டும் வெளியாகின. லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் முதலீடுக்கு மோசம் இல்லாத வசூலை […]

ஐரோப்பா

தீவிரமடையும் போர் : மக்களை வெளியேற்றும் ரஷ்யா

உக்ரைன் தாக்குதல்களால் பெல்கொரோடில் இருந்து 300 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது “தற்காலிகமாக வெளியேற முடிவு செய்த பெல்கொரோடில் வசிப்பவர்கள் சுமார் 300 பேர், தற்போது ஸ்டாரி ஓஸ்கோல், குப்கின் மற்றும் கொரோசான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று பெல்கொரோட் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.. . உக்ரைனுடனான எல்லையில் இருந்து பெல்கோரோட் அரை மணி நேர பயணத்தில் உள்ளது, டிசம்பர் 30 அன்று பெல்கொரோட் மீது உக்ரேனிய தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டதாக […]

இலங்கை

மருத்துவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க இலங்கை அமைச்சரவை அனுமதி!

  • January 8, 2024
  • 0 Comments

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இதுவரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிஏடி கொடுப்பனவு ரூ.35,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்பு கொடுப்பனவை அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 25 வீதத்தால் அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்பு கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அவர்களது சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.

இலங்கை

பங்களாதேஷ் பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

பங்களாதேஷில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் மக்களுக்கு ஷேக் ஹசீனா வழங்கிய சேவையும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமைத்துவமே இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவுமிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக தனது வாழ்த்துச் […]

ஆசியா

பாகிஸ்தானில் பொலிஸாரின் டிரக் மீது பயங்கரவாத தாக்குதல் : 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி!

  • January 8, 2024
  • 0 Comments

பொலிஸாரை ஏற்றிச் சென்ற டிரக் அருகிலான பயங்கரவாத தாக்குதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் நாடு முழுவதும் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், நடைபெறவிருந்த போலியோ நோய் தடுப்புக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கு சுமார் 25 பொலிஸாருடன் சென்ற டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 […]

ஐரோப்பா

ஜேர்மனியில் பொலிஸார் மீது தாக்குதல் தொடுத்த புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட கதி!

  • January 8, 2024
  • 0 Comments

ஜேர்மனியில் பொலிசாரை தாக்கிய புலம்பெயர்ந்தோர் ஒருவர், பொலிசார் தாக்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஜேர்மனியின் Mülheim நகரில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில், புலம்பெயர்ந்தோர் ஒருவர், ஊழியர்களைத் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.பொலிசார் அங்கு விரைந்த நிலையில், கினியா நாட்டவரான அந்த 26 வயது இளைஞர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அவரைக் கட்டுப்படுத்தமுயன்ற பொலிசாருக்கும் அடியும், கடியும் விழுந்துள்ளது. பெண் பொலிசார் ஒருவரும் தாக்கப்பட, அவரை டேஸர் மூலம் கட்டுப்படுத்த முயன்றுள்ளார்கள் பொலிசார். அவரைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் […]

இலங்கை

இலங்கை : அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை!

  • January 8, 2024
  • 0 Comments

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024 வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இருந்து 5000 ரூபா ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.