பொழுதுபோக்கு

ஆதித்த கரிகாலனாக விக்ரம் – வந்தியத்தேவனாக விஜய்… படம் எப்படி இருந்திருக்கும்?

கோலிவுட்டில் விஜய், விக்ரம் இருவருமே முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர். விஜய் மாஸ் காட்டினால், விக்ரம் வெரைட்டியாக நடித்து மிரள வைக்கிறார்.

இவர்கள் இருவரும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிக்கவிருந்தனர்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாகின. முதல் பாகம் 2022 செப்டம்பர் மாதமும், இரண்டாம் பாகம் கடந்தாண்டும் வெளியாகின.

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் முதலீடுக்கு மோசம் இல்லாத வசூலை பெற்றது. இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்திருந்தார்.

முதல் பாகத்தில் விக்ரம் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், இரண்டாம் பாகத்தில் வழக்கம் போல தனது நடிப்பில் மிரட்டியிருந்தார். அதேபோல் வந்தியத் தேவன் கேரக்டரில் கார்த்தியும், ராஜராஜசோழனாக ஜெயம் ரவியும் நடித்திருந்தனர்.

த்ரிஷா குந்தவை கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்தனர்.

முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தை 2000த்தின் தொடக்கத்தில் இயக்க மணிரத்னம் முடிவு செய்திருந்தார்.

அதில், விஜய், டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, விக்ரம் மூவரும் நடிக்கவிருந்தனர். அதாவது ராஜராஜசோழன் கேரக்டரில் மகேஷ் பாபுவையும், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமையும் நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்திருந்தார்.

வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஒருவேளை அப்போது பொன்னியின் செல்வன் உருவாகியிருந்தால், விஜய், விக்ரம் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்