மன்னராட்சிக்கு பின்னர் முதல் தடவையாக சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க இலங்கையிலிருந்து கப்பல்கள்
செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்காக இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது இந்த அறிவிப்பை வெளியிட்டதாக […]












