இலங்கை

கிடப்பில் போட்டப்பட்டது குருந்தூர்மலை வழக்கு!

  • January 11, 2024
  • 0 Comments

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதிவழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக […]

இலங்கை

யாழில் 86 கோடி பெறுமதியான அபின் போதைப்பொருள் மீட்பு

வடக்கில் முதல்முறையாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளது 48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் […]

இலங்கை

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!

  • January 11, 2024
  • 0 Comments

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் இடம் பெற்ற முற்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் காயமடைந்துள்ளார். திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி இன்று (11.01) மாலை 5.30 மணியளவில் பயணித்து கொண்டிருந்த முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. யுக்திய திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த முச்சக்கர வண்டி தடுமாற்றத்தில் நிறுத்த முற்பட்டபோது வீதியை விட்டி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது. இதனை அடுத்து […]

உலகம்

ஸ்பெயினுக்குச் செல்ல முயன்று ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் உயிரிழப்பு

கடந்த ஆண்டு ஸ்பெயினின் கரையை அடைய முயற்சித்தபோது ஒரு நாளைக்கு 18 பேர் இறந்தனர் அல்லது காணாமல் போனதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் இத்தனை தெரிவித்துள்ளது. இறந்த 6,618 பேரில் 384 குழந்தைகளும் அடங்குவர் என்று சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளளது. பலர் ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயற்சிக்கின்றனர். எனவும் தெரிவிக்கப்பட்டுளளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்காகும், இது 2007 ஆம் ஆண்டில் அமைப்பு கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து […]

இலங்கை

இலங்கையில் நீரில் மூழ்கிய புகையிர வீதிகள் : பல இரயில்கள் இரத்து!

  • January 11, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு – திருகோணமலை ரயில் பாதையில் புனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதி நீரில் மூழ்கியமையினால் அந்த பாதையின் போக்குவரத்து மேலும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று (11.01) கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயங்கும் இரண்டு இரவு அஞ்சல் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (12.1) காலை 6.05 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு செல்லும் உதயாதேவி […]

ஆசியா

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடந்த திட்டம் : இருவர் கைது

நாட்டின் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து “பயங்கரவாத தாக்குதல்களை” நடத்த திட்டமிட்டிருந்த இஸ்லாமிய அரசு குழுவின் இரண்டு பாலஸ்தீனிய ஆதரவாளர்களை கைது செய்ததாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெருசலேமில் வசிப்பவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து வெடிக்கும் சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இருவரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் எல்லைப் போலீஸ் படைக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை

லண்டனில் யாழ் – காரைநகரை சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • January 11, 2024
  • 0 Comments

தென்மேற்கு லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது […]

உலகம்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

  • January 11, 2024
  • 0 Comments

ஐவரி கோஸ்ட் செல்லும் விமானம் ஒன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தில் திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜான்கோ, இன்ஸ்டாகிராமில் இந்த விபத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அறிவித்து, சம்பவத்தின் வீடியோ பதிவைப் பகிர்ந்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் தூங்கிவிட்ட நிலையில், பயணிகள் தலைவலி மற்றும் தலைச்சுற்றலால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் “சவுதி அரேபியாவிலிருந்து (பயிற்சி முகாம்) காம்பியாவிற்கு இஸ்தான்புல் மற்றும் […]

வட அமெரிக்கா

கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து கீழே குதித்த பயணியால் பரபரப்பு!!

  • January 11, 2024
  • 0 Comments

கனடாவில் உள்ள டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி ஏர் கனடா விமான நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் இருந்த பயணி ஒருவர் அமர்வதற்கு பதிலாக, விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென விமானத்தின் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்திருக்கிறார். 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் […]

இந்தியா

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு இந்தியாவிற்கு கிடைத்த இடம்

உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகள் குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற பாஸ்போர்ட்டுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பட்டியலில்ன் இந்தியா 80-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் […]