2024 IPL தொடரின் முழு அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
அதன்படி மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் கொண்ட விவரம் வெளியானது.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து மீதமுள்ள அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது.
அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் தகுதிச் சுற்று எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ந் தேதி மற்றும் இறுதிப்போட்டி மே 26ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரு போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 40 times, 1 visits today)