இலங்கை

பொரலுகந்த ரஜமகா விகாரை தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் (Photos)

  • August 28, 2023
  • 0 Comments

திருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்தநிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டது. குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இயக்குனராக களமிறங்குகின்றார் விஜய்யின் மகன் : லைகா வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

  • August 28, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது ‛லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர். ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கி உள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார். தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது தான் ஆர்வம். அப்பா விஜய்யை போல் ஹீரோவாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக […]

இலங்கை

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 28, 2023
  • 0 Comments

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தெளிவுபடுத்தல் தேவைப்பட்டால், அந்த பிரச்சினைகளை cbslgen@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், சில மோசடியாளர்கள் தமது விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் குறித்து மத்திய வங்கி […]

வட அமெரிக்கா

சடலமாக கண்டெடுக்கப்பட்ட தந்தையும் குழந்தைகளும்: கனடாவில் அதிரவைத்த சம்பவம்

  • August 28, 2023
  • 0 Comments

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், ஒரு தந்தையும் அவரது பிள்ளைகளான இரட்டைக் குழந்தைகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாணத்திலுள்ள Lanaudière என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிஸார், அங்கு ஒரு ஆணும், இரண்டு குழந்தைகளும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த நபரின் பெயர் Ianik Lamontagne (46) என்றும், அந்தப் பிள்ளைகளுடைய பெயர்கள் Antoine மற்றும் Tristan என்றும் தெரியவந்துள்ளது.3 வயதான அந்தக் குழந்தைகள் இருவரும் இரட்டையர்கள் ஆவர். Ianik, […]

இலங்கை

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஆகஸ்ட் 28) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.விற்பனை பெறுமதி 329 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது. வளைகுடா நாணயங்களுக்கு எதிராக பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை

அப்போது போது வாய்திறக்காதவர் இப்போது கருத்து தெரிவிக்கிறார் – கோவிந்தன் கருணாகரம்

  • August 28, 2023
  • 0 Comments

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் போட்சிற்றி என்பனவற்றினை சீனாவுக்கு வழங்கியபோது வாய்திறக்காத பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்க நடவடிக்கையெடுக்கும்போது மட்டும் மக்கள் கருத்துப்பெறவேண்டும் என்பது அவரின் ஒரு பக்க செயற்பாட்டினை காட்டுவதாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் […]

இலங்கை

வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

  • August 28, 2023
  • 0 Comments

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு 15 ஐச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

தமிழ்நாடு

கோவையில் 2 நாளில் 5 பெண்களிடம் நகை பறிப்பு – நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை

  • August 28, 2023
  • 0 Comments

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர காவல்துறை சார்பில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த […]

ஆசியா

ஆப்கானிஸ்தானின் முக்கிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை!

  • August 28, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பேன்ட் இ அமீர் தேசிய பூங்காவிற்குள் பெண்கள் ஹிஜாப் அணிந்த பிறகும் அதனை  சரியாக அணியவில்லை என்ற காரணத்தால், அதற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உரிய தீர்வு கிடைக்கும் வரை பூங்காவில் பெண்கள் செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் முதல் பூங்காவாக பெயரிடப்பட்டது, பேண்ட் இ அமீர் பூங்கா ஆப்கானிய குடும்பங்கள் […]

மத்திய கிழக்கு

வெளிவந்த ஜிம்பாப்வே தேர்தல் முடிவுகள் : மீண்டும் அதிபராக எம்மர்சன் மங்கக்வா

  • August 28, 2023
  • 0 Comments

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நாளில் நடைபெற வேண்டிய தேர்தல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 24ம் திகதி வரை நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வாவுக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பான இந்த தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் எம்மர்சன் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் […]