14 தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவந்த இலங்கையர் கைது!
இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய வர்த்தகர் ஒருவரே நேற்று (27.08) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாக்காக்கில் இருந்து வருகை தந்த அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொண்டு வந்த சில உடமைகளை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்தபோது, […]












