இலங்கை

நான்காவது நாள் அகழ்வு பணி: மேலும் பல தடையப் பொருட்கள் மீட்பு (Photos)

  • September 9, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கலாம் […]

இந்தியா ஐரோப்பா

பிரதமர் ரிஷி சுனக்- மோடி இயையே இருதரப்பு பேச்சு வார்த்தை

  • September 9, 2023
  • 0 Comments

G20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் G20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்த மாநாட்டில் G20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின. இந்த நிலையில் இந்த G20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வணிக உறவை வலுப்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் […]

இலங்கை

வடக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணிபுரிய பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

  • September 9, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின்கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தொல்பொருள் மையங்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாது இருக்கும் போது […]

இலங்கை

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” ஓர் பயணம்!

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழை யில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது. இந்த பயணத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் சிறிஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரான்ஸ் அபாயா தடை: பள்ளி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

  • September 9, 2023
  • 0 Comments

பிரான்ஸ் பள்ளிகளில் மாணவிகள் அபாயா அணிய தடை விதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் அரசு, கடந்த மாதம், பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் அபாயா என்னும் உடலை மறைக்கும் அங்கியை அணிய தடை விதித்தது. அது கல்வியில் மதச்சார்பின்மை விதிகளை மீறுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பள்ளி துவங்கிய முதல் நாள் அன்று, சுமார் 300 இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு அபாயா அணிந்துவந்துள்ளனர். அவர்களில் பலர் அதை அகற்ற ஒப்புக்கொண்ட போதிலும், 67 […]

இலங்கை

யாழ். அளவெட்டி வடக்கு பகுதியில் திடீரென பற்றியெறிந்த அரிசி ஆலை

  • September 9, 2023
  • 0 Comments

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் இன்று காலை திடீரென பற்றியெறிந்த தீயினால் முற்றாக சேதமடைந்த அரிசி ஆலை. இச் சம்பவம் தொடர்பாக, நேற்றய தினம் மாலை அரிசி ஆலையில் வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது பின்னர் இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலையை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான […]

இலங்கை

தவறான சிகிச்சையினால் கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்! அருண் சித்தார்த்

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அருண் சித்தார்த் அரச வைத்தியசாலைகள்தான் ஏழைகளுக்கு இருக்கின்ற ஒரே புகலிடம் எனவும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர் மேலும் தெரிவிக்கையில், சில தினங்களுக்கு முன்பு யாழ். போதனா வைத்தியசாலையில் தவறான சிகிச்சையினால் தனது கரத்தை இழந்த சிறுமியான வைஷாலி தொடர்பான செய்திகள் சர்ச்சைகள் சமூகத்தில் மேலெழுந்த வண்ணம் […]

உலகம்

(New update) மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!

  • September 9, 2023
  • 0 Comments

மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. மொரோக்கோவின்   ஹை அட்லஸ் மலைத்தொடர்  பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமான மராகேச்சில் இருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர்கள் (44.7 மைல்) மையத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த […]

இலங்கை

அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி!

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் இங்கிலாந்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. பேஸ்புக் ஊடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் அறிமுகமாகி பின்னர் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், குறித்த பெண் இணையவழியில் முன்பதிவு செய்து அல்விஸ் மாவத்தையில் உள்ள குறித்த […]

பொழுதுபோக்கு

கமலுடன் மீண்டும் இணையும் மக்கள் செல்வன்… உறுதியான அறிவிப்பு

  • September 9, 2023
  • 0 Comments

உலக நாயகன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தனது 233வது படத்தை ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், KH 233 படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விதவிதமான துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் கமல், KH 233ல் […]