இலங்கை

யாழில் வீதியொன்றுக்கு அருகில் கிடந்த பெண்ணின் சடலம் – குழப்பத்தில் பொலிஸார்

  • October 13, 2023
  • 0 Comments

யாழில் வீதியொன்றுக்கு அருகில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், ஸ்டெல்லி மாவத்தையில் இந்த இனந்தெரியாத பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 65 வயது மதிக்கத்தக்க 05 அடி 05 அங்குல உயரமும், மெல்லிய உடலும் கொண்ட பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் பழுப்பு நிற சேலை அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழ்வியல்

இதயத்தைக் காக்கும் உணவு முறையும் – வழிமுறைகளும்!

  • October 13, 2023
  • 0 Comments

மனித உயிர் வாழ்க்கைக்கு இதய இயக்கம் மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக இயங்க உதவும் பத்து உணவு வகைகளையும், இதய நோய் வராமல் தவிர்க்க உதவும் சில வழிமுறைகளையும் இந்தப் பதிவில் காண்போம். ஒருவருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளது என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திடீரென மார்புப் பகுதியில் அசௌகரியம் மற்றும் கனம், அழுத்தும் உணர்வுடன் வலி, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், தீவிர பலவீனம் மற்றும் சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் […]

ஆசியா

அதிரடி யுக்தியில் ஹமாஸ் – இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

  • October 13, 2023
  • 0 Comments

காஸா போரை நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸை ஒடுக்கும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ள போதிலும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. ஹமாஸ் கடந்த 7-ஆம் திகதி தாக்குதலை துவக்கியதில் இருந்து பலியான இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1300! இதுதவிர தங்கள் வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மறுபுறம், பாலஸ்தீன தரப்பில் 1203 […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

Apple நிறுவனத்தால் பெயரை மாற்றவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள பெண்!

  • October 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பெண் ஒருவர் Apple நிறுவனத்தால் அவரின் பெயரை மாற்றவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். Edinburgh நகரைச் சேர்ந்த அவரின் பெயர் சிரி பிரைஸ் (Siri Price) என குறிப்பிடப்படுகின்றது. Apple நிறுவனத்தின் புதிய iOS மென்பொருளால், ஒவ்வொரு முறையும் அவரை யாராவது கூப்பிடும்போது அருகில் இருக்கும் iPhone திறன்பேசிகளின் “Hey Siri” அம்சம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அவர் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்றுவிப்பாளராக வேலை செய்கிறார். அங்கும் அவரைப் பலர் கூப்பிடும்போது அதே சிக்கல்தான் என குறிப்பிடப்படுகின்றது. […]

ஆசியா

வடகொரியாவின் ஆயுதங்களை ஹமாஸ் பயன்படுத்தலாம் என எதிர்வுக்கூறல் : வடகொரியா பதிலடி!

  • October 13, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹமாஸ் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என முன்வைக்கப்படும் கருத்துக்களை வடகொரியா மறுத்துள்ளது. சில ஊடக அறிக்கைகளில் கூறப்பட்ட கூற்று, மோதலின் பழியை தன்னிடம் இருந்து மூன்றாவது நாட்டிற்கு திசைதிருப்ப வாஷிங்டனின் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ரேடியோ ஃப்ரீ ஏசியா இந்த வாரம் இராணுவ வல்லுநர்களை மேற்கோள் காட்டி ஹமாஸ் போராளிகள் வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் பாலஸ்தீனிய போராளிகளின் காட்சிகள் வடக்கிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ராக்கெட் லாஞ்சராகத் தோன்றியதைக் காட்டுவதாகவும் […]

இலங்கை

சுற்றாடல் அமைச்சு ரணிலின் வசம்!

  • October 13, 2023
  • 0 Comments

சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை

உலகின் பூச்செடிகள் ஆபத்தில் – பாதி அழிந்துபோகும் அபாயம்

  • October 13, 2023
  • 0 Comments

உலகின் பூச்செடிகளில் ஏறத்தாழப் பாதி, அழிந்துபோகும் அபாயத்தில் லண்டனின் கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுமுதல் 18,800க்கும் மேற்பட்ட புதிய வகைத் தாவரங்களுக்கும் காளான்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிலத் தாவரங்களின் அனைத்துலகத் தரவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 350,000 தாவர இனங்கள் உள்ளன. கியூ தோட்டம், விதைகளைச் சேமித்துவைப்பது, எஞ்சியுள்ள அதன் தாவர, காளான் மாதிரிகளைப் பராமரிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பல உயிரினங்களைப் பாதுகாக்க முற்படுகிறது. ஆசியா, […]

இலங்கை

இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பதில் புதிய முன்மொழிவை சமர்ப்பித்த தனியார் நிறுவனம்!

  • October 13, 2023
  • 0 Comments

12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள தனியார் கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அதிகாரிகளிடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் புதிய பத்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பொருளாதாரம் ஏதேனும் நெருக்கடியை எதிர்கொண்டால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இந்த புதிய பத்திரம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா

இஸ்ரேல் பிரச்சினை – ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்

  • October 13, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை தொடர்ந்து 7வது வாரமாக 02 டொலர்களை தாண்டி செல்வதை காணமுடிகிறது. இந்த நிலை கிறிஸ்மஸ் சீசன் முடியும் […]

உலகம்

ஹமாஸுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளளை நீக்கியது X தளம்!

  • October 13, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த ஒருவார காலமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், பயங்கரவாதிகளுக்கு X இல் இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளை X நீக்கியுள்ளது. “X  பொது உரையாடலுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது, குறிப்பாக இது போன்ற முக்கியமான தருணங்களில், தளத்தின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு சட்டவிரோத உள்ளடக்கத்தையும் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.