கொடிகாமம்- பருத்தித்துறையில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அகற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு!
கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களால் நேற்று (22.11) இரவு குறித்த கொடிகள் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8மணி வரை நினைவேந்தல் இடத்தில் […]













