பரிசுகள் மற்றும் பொருட்களுக்காக பணம் அனுப்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
சமூக ஊடக கணக்குகள் மூலம் தனிநபர்களுக்கு பொருட்கள் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொள்ள தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். சமூக ஊடக மோசடி செய்பவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுங்கப் பேச்சாளரும், மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சுதத்த சில்வா, கடந்த சில வாரங்களாக, வெளிநாட்டுப் பிரிவினர் மக்களை ஏமாற்றி பரிசுப் பொருட்களை காட்டி மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் நிரம்பி வழிகின்றன. அதன்படி, […]













