”சரணடைந்த பிள்ளைகளையே கொக்குத்தொடுவாயில் புதைத்திருக்கிறார்கள்”: து.ரவிகரன்
கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள்: பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இரண்டாம் நாளான இன்றையதினம் (07.09.2023) அகழ்வு பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது. குறித்த இடத்திற்குள் செல்ல முடியாது. இருந்தாலும் ஒரு தடவை அருகிலே நின்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. நாங்கள் […]













