ஆசியா

தென்கொரியா-இந்தோனேசியா இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • September 9, 2023
  • 0 Comments

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக கடந்த ஆண்டு இந்தோனேசியா மாறியது. இந்தநிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வணிக வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தென்கொரியா மற்றும் இந்தோனேசியாவின் மந்திரிகள், தொழிலபதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது முக்கிய கனிமங்கள் மற்றும் பிற தொழில்துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் அணுமின் உற்பத்தி குறித்த தகவல்களை பரிமாறுவதற்காக இரு நாட்டு […]

இலங்கை

இலங்கைக்கு கடத்துவதற்கு பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – சிக்கிய பெண் உட்பட நால்வர்

  • September 9, 2023
  • 0 Comments

இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி மதிப்புள்ள 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த மண்டபம் போலீசார் ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற பெண் உட்பட நாலு பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் மண்டபம் அடுத்த வேதாளை, சீனியப்பா தர்கா மற்றும் மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட […]

இலங்கை

திருகோணமலையில் இசை நிகழ்ச்சி பார்க்க சென்ற கர்ப்பிணி தாய்க்கு நேர்ந்த கதி

  • September 9, 2023
  • 0 Comments

இசை நிகழ்ச்சி பார்ப்பதற்காக சென்ற 05 மாத கர்ப்பிணி தாயொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் (09) இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் மொரவெவ- 02ம் கண்டத்தில் வசித்து வரும் 05 மாத கற்பிணியான ஜீ.பவித்ரா ரசங்கி (19வயது) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவும் தெரியவருகிறது. விகாரையில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சிக்காக கணவனுடன் சென்றதாகவும், கணவரை குழுவொன்று தாக்க […]

இலங்கை

இலங்கையில் ஐரோப்பிய நாட்டு பிரஜை அட்டகாசம் – கைது செய்த பொலிஸார்

  • September 9, 2023
  • 0 Comments

பெலாரஸ் நாட்டு பிரஜை ஒருவர் ஹபராதுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக மதுபோதையில் தமது நண்பர், தாம் தங்கியிருந்த உணவக உரிமையாளரின் மகள் உள்ளிட்டோரை தாக்கிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது. முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் குறித்த நபர் செயற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த பெலாரஸ் நாட்டு பிரஜை பொலிஸாரையும் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியா

சிட்னியில் நிலநடுக்கம் – சில மாதங்களுக்குள் 3வது முறை

  • September 9, 2023
  • 0 Comments

சிட்னியின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. சிட்னியில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Appin பகுதியில் 02 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று அதிகாலை 12.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 200 பேர் தெரிவித்துள்ளனர் என்று பேரிடர் திணைக்களம் அறிவித்துள்ளது. சில மாதங்களில் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது இது 3வது முறையாகும். கடந்த ஜூன் 18ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகவும், ரிக்டர் அளவுகோலில் 3.2 […]

கருத்து & பகுப்பாய்வு

சனல் 4 பொய்களின் திணிப்பா?

  • September 9, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு கொலை தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல் நாட்டை உலுக்கிப்போட்டிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் அதுபற்றி பேசவைத்திருக்கிறது. அச்செய்தி. எல்லா அரசில் வாதிகளையும் நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. யார்மீது என்ன குற்றச்சாட்டு வந்துவிடுமோ ? யார் யார் தங்களை அறியாமல் சம்மந்தப்பட்டிருப்போமோ என்று தம்மை தாமே சந்தேகப்படும் அளவுக்கு சனல் 4 செய்தி அரசியல் தலைமைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம், மூட்டியிருக்கும் தீ 1 ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவா இடம்பெற்றது 2 தாக்குதல் சம்பவத்தோடு […]

அறிந்திருக்க வேண்டியவை

ChatGPT மீதான ஆர்வம் குறைந்தது – கைவிடும் பயனாளர்கள்

  • September 9, 2023
  • 0 Comments

ChatGPT இணையத்தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. OpenAI நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்திய இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ChatGPTயை ஒருமுறையேனும் பயன்படுத்தாதவர்கள் யாருமில்லை என்ற அளவுக்கு அது பிரபலமானது. Similarweb எனும் ஆய்வுநிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ChatGPT இணையத்தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து 3ஆவது மாதமாக குறைந்து வந்துள்ளது. அதற்கமைய, மக்களின் ஆர்வம் ஜூன் மாதம் சுமார் 10% குறைந்தது, ஜூலை மாதம் […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 296 பேர் உயிரிழப்பு

  • September 9, 2023
  • 0 Comments

மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 296 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்ததுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான வரலாற்றுச் சிறப்புமிக்க மராகேச்சிலிருந்து தென்மேற்கே 44 மைல் (72 கிலோமீட்டர்) தூரத்தில் மையமாக […]

இலங்கை

செனல் 4 வீடியோ பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டவை – பாதுகாப்பு அமைச்சு கொந்தளிப்பு

  • September 9, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உத்தியோகப்பூர்வமாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானாவின் தகவல்கள் அடங்கிய ஆவணப்படம் ஒன்றினை செனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது. கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தற்கொலை குண்டுதாரிகளுடன் சந்திப்பை நடத்தியதாகவும் குறித்த […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

  • September 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பேஷோர் சாலையில் உள்ள காண்டோமினியம் பிளாக்கின் 25 வது மாடியில் இருந்து விழுந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். 26 வயதுமிக்க அந்த பெண்ணை சோதித்ததில் அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது. அவர் 25 வது மாடியில் இருந்து விழுந்ததாக வாசகர் கூறியதாக மதர்ஷிப் குறிப்பிட்டுள்ளது. அவர் சீனப்பெண் என்றும் கூறப்படுகிறது. கடந்த 7ஆம் திகதியன்று மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் அவர் விழுந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அன்று மாலை 6 மணியளவில் […]