அரசியல் இலங்கை செய்தி

1983 ஜுலைக் கலவரம்: தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்

1983 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் சமூகத்திடம் இன்று மன்னிப்பு கோரினார்.

1983 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் சமூகத்திடம் இன்று மன்னிப்பு கோரினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு ,

“எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் 83 கருப்பு ஜூலையை ஒரு கருப்புப் புள்ளியாகவே நாம் கருதுகிறோம். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். கருப்பு ஜூலையினால் பாதிக்கப்பட்ட எமது நாட்டின் சமூகத்திடமிருந்து, குறிப்பாக தமிழ் சமூகத்திடமிருந்து, அதற்காக வருத்தத்தை தெரிவிப்பது மட்டுமன்றி, அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக, அந்தப் பாதிப்புக்குள்ளான அனைவருக்காகவும் ஒரு நாடாக நாம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எமது நாட்டின் பெருமளவிலான குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் நல்லிணக்கத்தின் பெயராலும், சகோதரத்துவத்தின் பெயராலும் எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைக்கிறோம். மீண்டும் மீண்டும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், அதே போல் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக, இந்த விவாதத்தில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என்று பேசுவதை நான் கேட்டேன். எமது நாட்டில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என்றில்லை, நாம் புரிந்துகொள்ள வேண்டியது ‘இலங்கையர்’ என்பதாகும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை