100 வெளிநாட்டவர்களுக்கு ரஃபா எல்லையை கடந்துச் செல்ல அனுமதி!
ஏறக்குறைய 100 வெளிநாட்டவர்கள் ரஃபா எல்லை வழியாக எகிப்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாலஸ்தீனிய எல்லை ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில், 92 பிரித்தானிய பிரஜைகள் எகிப்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே போருக்குப் பிறகு பாலஸ்தீன அகதிகள் திரும்புவதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தும் பட்சத்தில், அவர்கள் வருகையை ஏற்க மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் (02.11) வெளிநாட்டு ஆவணங்களுடன் சுமார் 342 பாலஸ்தீனியர்கள் மற்றும் 42 பேர் கடந்து சென்றதாக பாலஸ்தீனிய எல்லை ஆணையம் தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)