ஐரோப்பா செய்தி

மன்னன் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி கலந்துகொள்வார்

அடுத்த மாதம் நடைபெறும் பிரித்தானியாவின் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது மனைவி மேகன் தங்கள் குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் இருப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.

மே 6 அன்று லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியத்துடன் ஆடம்பரமும் நிறைந்த விழாவில் சார்லஸ் முடிசூட்டப்படுவார்.

இந்நிலையில் மன்னரின் முடி சூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தம் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம் மற்றும் தொடர் தொலைக்காட்சி நேர்காணல்களில் மன்னர் சார்லஸ், ஹாரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் அரச குடும்பங்கள் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதனால் அரச குடும்பத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்ததுடன், அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோர் ஒதுங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content