இலங்கை

கொலை வழக்கு – பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு : மற்றொருவருக்கு பிடியாணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஐந்துபேரை கொலை செய்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் இருவர் ஆகியோரின் விளக்கமறியல் வரும் 13 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது மட்டக்களப்பில் இடம்பெற்ற பல சம்பவங்களுடன் தொடர்புடையது.

இதில் 2008 ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுனதீவில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டமை ஆகியன அடங்கும்.

இவ்வழக்குகளில் சந்தேகநபராக உள்ள பிள்ளையான், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்தது.

குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், பிள்ளையான் மற்றும் தற்போது லண்டனில் வசிப்பதாக நம்பப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இன்று திறந்த நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்கள் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதேவேளை, பிள்ளையான் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.

விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிள்ளையான் மற்றும் ஏனையோரை அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், லண்டனில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராகப் புதிய பிடியாணை ஒன்றை பிறப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்