ஐரோப்பா கல்வி மத்திய கிழக்கு

பிரித்தானிய பிரதமரின் ‘தலை’ குறிவைப்பு

ஆயமநசகநைடன இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரின் தலைமைப் பதவிக்கு கட்சிக்குள் பலத்த சவால் எழுந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer பதவி விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன.

Makerfield இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த வெற்றி, லேபர் கட்சிக்குள் (Labour Party) புதிய தலைமைக்கான போட்டியை உக்கிரமடைய வைத்துள்ளது.

குழப்பம், பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், ஆண்டி பர்ன்ஹாமிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான திட்டங்களை பிரதமர் அறிவிக்க வேண்டும் என லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், பதவியை விட்டு விலகப் போவதில்லை என்றும் பிரதமர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் பிளவு

பிரதமர் ஸ்டார்மர் , வெள்ளிக்கிழமை மதியம் தனது அமைச்சரவை சகாக்களைத் தொடர்பு கொண்டு தனக்கு இருக்கும் ஆதரவு குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் (Heidi Alexander), பிரதமர் தனது பதவி விலகலுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது, தெரியவந்துள்ளது.

அதேநேரம், நிதி செயலாளர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) பிரதமருக்குத் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த மாத தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மற்றும் எரிசக்தித் துறைச் செயலாளர் எட் மிலிபான்ட் ஆகியோரும் பிரதமர் விலக வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலுத்து வரும் இந்த நெருக்கடிக்கு மத்தியில், வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் பிரதமருக்கு ஒரு முக்கியமான சோதனைக் கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்