ஆஸ்திரேலியா

நாடாளுமன்ற அமர்வின் போது தன் காதலை தெரிவித்து அனைவரையும் புல்லரிக்கவைத்த MP!(வீடியோ)

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, MPஒருவர் காதலியான சக MPயை, திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி MPயான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான MP நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

இதன்போது தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், பின்னிரவில் அதை தருவதாகவும் MPஅன்பை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி MPயின் காதலை உற்சாகப்படுத்தினர்.மேலும் MPலாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்ட நோவா எர்லிச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித