இலங்கை செய்தி

இலங்கை பொருளாதார மறுசீரமைப்புக்கு உலக வங்கி ஆதரவு

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தினால் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
See also  "எனக்கு மறுவாழ்வு கொடுத்ததே கோலி, ரவி சாஸ்திரி தான்".. நெகிழ்ந்த ரோஹித் சர்மா
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content