Consent Preferences
இந்தியா செய்தி

850 ஆக அதிகரிக்குமா மக்களவை ஆசனங்கள்? 30 ஆம் திகதி கூடுகிறது இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை நவம்பர் 30ஆம் திகதியும், மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் திகதியும் மீண்டும் கூடவுள்ளன.

இரு அவைகளினதும் அமர்வுகள் டிசம்பர் 3ஆம் திகதியுடன் நிறைவடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள மசோதாக்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்கும் திட்டம்

தற்போது 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை ஊடாக இந்த மாற்றத்தை மேற்கொண்டு, 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த மசோதா தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். கடந்த ஏப்ரல் மாதம் இதற்காக முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியிருந்தது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை நடவடிக்கையின்போது மாநிலங்களுக்கிடையிலான பிரதிநிதித்துவ விகிதம் பாதிக்கப்படக்கூடாது என தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையில், ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவை ஆசனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தால் அதிகரித்து, மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய விகிதத்தைப் பாதுகாக்கும் யோசனையும் பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், வாக்காளர் பட்டியல்களைச் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செய்வதற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் நாடாளுமன்றத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலையும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி