‘காணி விடுவிப்பு’ – மயிலிட்டி மக்கள் 17வது வாரமாக போராட்டம்
படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மயிலிட்டியில் உள்ள இராணுவத்தின் தளபதிகளுக்கான ஓய்வு மாளிகை முன்பாக இந்தப் போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினால், கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் நிலங்களை இழந்துள்ள மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.




