உலகம்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை – விமான நிலையத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை இன்று  புதுப்பித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்கக் குடிமக்கள் ஜோர்டானில் உள்ள அகாபா சர்வதேச விமான நிலையம் மற்றும் அகாபா துறைமுகத்திற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜோர்டான் அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்கக் குடிமக்கள் ஜோர்டானில் உள்ள இராணுவத் தளங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்புச் சூழல் காரணமாக, ஜோர்டானில் பணிபுரியும் அத்தியாவசியமற்ற அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மார்ச் 2 அன்று ஜோர்டானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்