பொழுதுபோக்கு

“சூப்பர் ஸ்டார்” பட்டம் – மீண்டும் தேரை இழுத்து நடு வீதியில் விட்ட விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. ரஜினிக்கு பிறகு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்கள்.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டிக்கதை அந்த சர்ச்சைக்கு மேலும் பரபரப்பு கூட்டியது.

இப்படியான நிலையில் தான் லியோ படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என்று கூறி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமும், பதிவும் மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், கமல்ஹாசனுக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கிறார் விஷ்ணு விஷால்.

கமல்ஹாசன் அருகே பாலிவுட் நடிகர் அமீர்கானும் நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு, சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் சூப்பர் ஸ்டார்கள்தான் என்று அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்