செய்தி விளையாட்டு

சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் SENA நாடுகளுக்கு எதிராக அதிக தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் SENA நாடுகளுக்கு எதிராக அதிக தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒக்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 74 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் கோலி இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதுவரை சச்சின் டெண்டுல்கர் 133 தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் இருந்தார். தற்போது 134 தடவைகள் இத்தகைய ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள கோலி, சச்சினின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்கா (South Africa), இங்கிலாந்து (England), நியூசிலாந்து (New Zealand), அவுஸ்திரேலியா (Australia) ஆகிய நான்கு நாடுகளே SENA நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா 100 தடவைகளுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 97 தடவைகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் 91 தடவைகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

SENA நாடுகளுக்கு எதிராக அதிக 50+ ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள்:

1. விராட் கோஹ்லி (இந்தியா) – 134
2. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 133
3. பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்) – 100
4. குமார் சங்கக்கார (இலங்கை) – 97
5. ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா) – 91

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி