மத்திய கிழக்கு

லெபனானில் அகதிகள் முகாமில் வெடித்த வன்முறை; 6 பேர் பலி

லெபனான் நாட்டில் 10க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளத அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.

ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை மாத இறுதியில் முகாமில் பலியானார். அவரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7ம் திகதி முதல் முகாமில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த மோதலில் ஆயுதமேந்திய போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடக்கத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து முகாமில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தப்பி வெளியேறி வருகின்றனர்.

அவர்களில் பலர் உள்ளூர் மசூதிகள், பள்ளிகள் மற்றும் சிடான் நகராட்சி கட்டிடம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், லெபனானில் 55 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content