பொழுதுபோக்கு

நீண்ட இடைவேளைக்குப் பின் மோதும் சூர்யா – விக்ரம் படங்கள்… சம்பவம் உறுதி

குறிப்பிட்ட காலகட்டம் வரை விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு நடுவே படங்கள் ரிலீஸ் ஆகும் போது பயங்கர போட்டி இருக்கும். கிட்டத்தட்ட 20 முறை இவர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது .

விஜய் அஜித்துக்கு பிறகு சூர்யா மற்றும் விக்ரம் தான் அடுத்த கட்ட ஹீரோக்களாக இருந்தார்கள். அதன் பின்னர் இருவரது பாதைகளுமே வேறு வேறு என்று ஆகிவிட்டது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை சூர்யா மற்றும் விக்ரம் படங்கள் மோத இருக்கிறது.

சூர்யாவுக்கு தொடர் தோல்விகளுக்கு பிறகு அவர் பெரிய அளவுக்கு நம்பி இருப்பது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரெட்ரோ படம் தான்.

இந்த படம் வரும் மே மாதம் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் நடித்து பல வருடங்களுக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளி போடப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் படத்தையும் இந்த தேதியில் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த போட்டியில் ஜெயிக்கப் போவது ரெட்ரோவா அல்லது துருவ நட்சத்திரமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்