பொழுதுபோக்கு

‘வேட்டையன்’ பட சிறப்பு காட்சிக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 170-வது திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியள்ளார்.

தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக நாளை வெளியாக உள்ளது ‘வேட்டையன்’ திரைப்படம்.

இந்த படத்தில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதை போல் மலையாள நடிகர் பகத் பாஸில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களை தவிர நடிகை ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் மிகவும் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் இசையமைத்துள்ளார்.

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் தமிழக அரசின் உரிய அனுமதி பெற்ற பின்னரே… சிறப்பு காட்சி வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சி வெளியிட, ‘வேட்டையன்’ பட குழு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு மனுகொடுத்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி போடப்பட உள்ளது. எனவே நாளை மொத்தம் 5 காட்சிகள் ஒளிபரப்பாகும். தமிழகத்தில் 9-க்கு சிறப்பு காட்சிகள் போடப்பட்டாலும், புதுவை, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 7 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்