செய்தி

வைத்திலிங்கம் ‘அந்தர் பல்டி’ – திமுகவுடன் சங்கமம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று சங்கமித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.

வைத்திலிங்கம் 4 தடவைகள் ஒரத்தநாடு சட்ட சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி பூசலின் விளைவாக ஓபிஎஸ் ஆரம்பித்த அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் வைத்திலிங்கம் செயல்பட்டார்.

ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராகவே அவர் பார்க்கப்பட்டவர்.

இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி எம்எல்ஏவாக இருப்பவர் இன்னொரு கட்சியில் சேரக்கூடாது என்பதால் ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

ஆட்டம் காணும் ஓ.பி.எஸ். அணி! வைத்திலிங்கமும் ‘அவுட்’!

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி