ஹூதி போராளிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் இரகசிய பேச்சுவார்த்தை
யேமனில் உள்ள ஹூதி போராளிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஓமானில் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஓமான் அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன், ஓமானின் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.




