உலகம்

ஹூதியின் தொடர் தாக்குதல் – சீனாவிடம் உதவிக் கோரிய சவுதி அரேபியா

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல் காரணமாக சவூதி அரேபியா சீனாவிடம் உதவிக் கோரியிருந்தது.

இந்நிலையில் ஹூதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உதவுமாறு சீனா தனிப்பட்ட முறையில் தெஹ்ரானிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக விவரத்தை நன்கறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக ரொய்டர்ஸ் கூறியுள்ளது.

செங்கடல் கடற்கரை மற்றும் பாப்-எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதிகளில் ஹூதிகள் வேகமாக முன்னேறியதைத் தொடர்ந்து சவூதி அரேபியா சீனாவின் உதவியை நாடியது.

இத்தகைய முன்னேற்றங்கள் சவூதியின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்தை அதிக ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா பெரிதும் சார்ந்திருக்கும் எரிசக்தி விநியோகப் பாதைகளில் மோதல் மேலும் பரவுவதைத் தடுக்க, ஹூதிகள் மீதான தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்