வட அமெரிக்கா

பனாமா கால்வாயை இலவசமாகக் கடக்கும் வாய்ப்பை பெற்ற அமெரிக்க அரச கப்பல்கள்

பனாமா கால்வாயைக் கடக்கும் அமெரிக்காவின் அரசாங்கக் கப்பல்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு இதனை கூறியுள்ளது.

பனாமா, கப்பல்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பலமுறை சாடியதை அடுத்து அந்த அறிவிப்பு வந்துள்ளது.

கால்வாயைத் தென் அமெரிக்க நாடான பனாமாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா 1977இல் ஒப்பந்தம் செய்துகொண்டது. கால்வாயை மீண்டும் வசமாக்கிக் கொள்ளப்போவதாக டிரம்ப் மிரட்டினார்.

கால்வாயைப் பாதுகாக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது, அதனிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது அநியாயம் என்று டிரம்ப்பின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பனாமாவின் அறிவிப்பால் அமெரிக்க அரசாங்கத்துக்கு மில்லியன்கணக்கில் செலவு மிச்சப்படும் என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

கால்வாயைப் பாதுகாக்க பனாமாவுடன் மேலும் நெருக்கமாகப் பணியாற்றவுள்ளதாகவும் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்