அலட்சியமான இராணுவ சாகசத்தை மேற்கொள்ளும் அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு!
“இராஜதந்திரத் தீர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அமெரிக்கா ஒரு ‘அலட்சியமான இராணுவ சாகசத்தை’ மேற்கொள்வதாக” ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து அவரது இந்த கருத்து வந்துள்ளது.
இது தொடர்பில் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையிலும், ஈரானியர்கள் “ஒருபோதும் அழுத்தத்திற்குப் பணிய மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கடையே மோதல்களுக்கு மத்தியில், போர் நிறுத்தம் அப்படியே இருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,




